Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் சாதித்த பாஜக.. டிடிவி+ எடப்பாடி பழனிசாமி.. பலமான என்டிஏ சாதிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவும் இந்த "எடப்பாடி - தினகரன்" கூட்டணி மாற்றம் ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகப் பகையும், விமர்சனங்களும் நிலவி வந்த நிலையில், தற்போது இவர்கள் கை கோர்த்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு புதிய ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது. ஆனால் இது தேர்தலில் சாதிக்க உதவுமா அல்லது என்னாகும் என்பதை பார்ப்போம்

டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்துள்ளார். அதிமுகவில் அதிகாரத்தை முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் பகையாளி போல மாறினார். நான் எடப்பாடி உடன் கூட்டு வைப்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்று எல்லாம் பேசியிருந்தார்.

Rising Stakes in TN Is the EPS-Dhinakaran Truce the Game Changer BJP Was Waiting For

இன்னும் கடுமையாக டிடிவி தினகரன் பேசியிருந்தார். ஆனால் திமுகவை வீழ்த்த எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைத்த பாஜகவின் அழைப்பை டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் தேறுமா? இதோ சில கள நிலவரங்களை பார்ப்போம்.

தென் மாவட்ட வாக்கு வங்கி (முக்குலத்தோர் வாக்குகள்)

டி.டி.வி. தினகரனின் அமமுக மற்றும் ஓ.பி.எஸ் (இணைந்தால்) ஆகியோருக்கு தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி உண்டு. கடந்த 2021 மற்றும் 2024 தேர்தல்களில் அதிமுகவின் தோல்விக்கு இந்த வாக்குகள் சிதறியது ஒரு முக்கிய காரணம். 2021தேர்தலில் அதிமுக 21 இடங்களில் தோற்றுப்போக டிடிவி தினகரன் ஒரு முக்கிய காரணம்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் அதிமுக தோற்க டிடிவி தினகரன் காரணமாக இருந்தார். அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்தது. இப்போது இவர்கள் இணைவது, தென் மாவட்டங்களில் மற்றும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு இழந்த பலத்தை மீண்டும் பெற்றுத் தர வாய்ப்புள்ளது.

"துரோகம்" மறைந்து "விருப்பம்" மலர்ந்தது

"எடப்பாடிக்குத் துரோகத்திற்காக நோபல் பரிசு கொடுக்கலாம்" என்று பேசிய தினகரன், இப்போது "பழைய கசப்புகளை மறந்துவிட்டோம்" என்று கூறியிருக்கிறார். இது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் "அதிகாரத்திற்காக மீண்டும் இணைகிறார்களா?" என்ற கேள்வியையும் எழுப்ப வாய்ப்பு உள்ளது. எனினும் பாஜகவை பொறுத்தவரை, திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருக்க இது உதவும் என்பது அதிமுகவின் கணக்கு.

பாஜக மற்றும் பாமகவின் பங்களிப்பு

ஏற்கனவே அன்புமணி ராமதாஸின் பாமக மற்றும் பாஜக இந்தக் கூட்டணியில் உள்ள நிலையில், தினகரனின் வருகை கூட்டணியை ஒரு வலுவான "மாற்று" பிம்பமாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக வடக்கில் பாமக, தெற்கில் தினகரன் என அதிமுகவின் வியூகம் தெளிவாக இருக்கிறது


சாதித்த பாஜகவிற்கு சவால்கள் இருக்கிறது

திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் அதிமுக, அமமுக, பாமக, பாஜக மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்தாலும், ஜெயிப்பதில சில சவால்கள் நீடிக்கின்றன.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம்

முதல் முறையாகக் களம் காணும் விஜய், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் இளம் வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்க வாய்ப்பு இருக்கிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி கணக்குகளைப் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் தமிழ் திரை உலகில் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான விஜய்க்கு பெண்கள், இளைஞர்கள் கோடிக்கணக்கானோர் ரசிகர்களான உள்ளனர். எனவே அவரது ரசிகர்கள் அப்படியே வாக்காளர்களாகி வாக்களித்தால், பெரிய பாதிப்பு அதிமுக, திமுகவிற்கு ஏற்படும். திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் குறிவைப்பதால், தேசிய ஜனநாயககூட்டணிக்கு தான் விஜய் சவாலாக இருப்பார்.விஜய் தனித்து போட்டியிடுவது திமுகவின் பெரிய சாதகமாகவும் இருக்கும் என்பதே அரசியல் நிபுணரகளின் கணிப்பாக இருக்கிறது.

சீமானின் நாதக

சீமானின் நாம் தமிழர் கட்சி 8-10% வாக்குகளைத் தனித்து வைத்திருக்கிறது. எந்தக் கூட்டணியிலும் சேராமல் ஓட்டுகளைப் பிரிப்பது அதிமுக கூட்டணிக்கே அதிகச் சேதாரத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிரானவாக்குகள் சிதறினால், ஆளும் கட்சி எளிதாக ஜெயிக்கும் என்பது பழைய வரலாறு.. எனவே அதுபோன்ற நிலையை விஜய், சீமான் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

இறுதி நிலவரம்

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் இந்த "மெகா கூட்டணி" திமுகவுக்கு ஒரு கடினமான போட்டியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், "யார் முதல்வர்?" என்ற அதிகாரப் பகிர்விலும், தொகுதிகளைப் பங்கிடுவதிலும் வரும் இழுபறிகளை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தக் கூட்டணியின் வெற்றி அமையும். அதேபோல் விஜய் ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு கடைசியில் தாவினால், திமுகவிற்கு தான் மிகப்பெரிய சவாலாக மாறும். ஆனால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், திமுக உற்சாகமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+