தமிழக அரசின் கம்ப்யூட்டர்களுக்கு ஹேக் ஆபத்து.. முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா அவசர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் கணினி அமைப்புகள், இணையச் சேவைகள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே அரசு உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சைபர் பாதுகாப்பு தொடர்பாக மிகக் கடுமையான சம்பவம் ஒன்று eMudhra நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது.எனவே பழைய ஆப்கள் மற்றும் அப்டேட் ஆகாமல் இருந்தால் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஓர் இணையதளம் உண்மையானதா, பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க அடையாள சான்று அவசியம். அந்தச் சான்றிதழை உருவாக்கவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் ரகசிய கீ உருவாக்கப்படுகிறது.இந்த கீ பலவீனமாக இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

TN government

தமிழக அரசின் இணையதளங்கள், அரசு அலுவலகங்களின் கணினிகள், இணையத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்கள், ரவுட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் பாதுகாப்பான சான்றிதழ்களை நம்பியே செயல்படுகிறது. தற்போது அந்தச் சாதனங்கள் போலியான சான்றிதழ்களையும் உண்மையானவை என்று நம்பினால், இணையத் தொடர்பின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும். எனவே அரசு அதிகாரிகளும், சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், சான்றிதழ் வழங்கும் அதிகார அமைப்பை சேர்ந்த 8 தனிப்பட்ட ரகசிய கீக்கள் (Private Keys) ஆபத்தான வகையில் பலவீனமாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த ரகசிய விசைகள் 256-ஐவிடச் சிறிய எண்களாக இருந்தன. எளிமையாகச் சொல்வதென்றால், கிட்டத்தட்ட யாராலும் யூகிக்க முடியாத ரகசிய விசையைக் கொண்டிருக்க வேண்டிய டிஜிட்டல் பூட்டில், யாராலும் எளிதில் யூகிக்கக்கூடிய விசை பயன்படுத்தப்பட்டிருந்தது!

இதனால் போலியான பாதுகாப்புச் சான்றிதழ்களை உருவாக்கவும், உண்மையான இணையதளங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஏற்கனவே கூகுள், மொசில்லா, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் t ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே தங்களது ப்ரௌசர்கள் மற்றும் கணினி அமைப்புகளில் இந்தச் சான்றிதழ்களைத் தடை செய்துள்ளன.

ஆனால், இணையத்துடன் இணைக்கப்படும் பொருள்கள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட சாதனங்கள்தான் உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. கேமராக்கள், ரவுட்டர்கள், ஸ்மார்ட் மீட்டர்கள், இயந்திரங்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சாதனங்களுக்கு பெரும்பாலும் பாதுகாப்புப் புதுப்பிப்புகள் வழங்கப்படுவதில்லை. பல சாதனங்கள் ரத்து செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்ப்பதுமில்லை. இதனால், அவை போலியான சான்றிதழ்களையும் தொடர்ந்து நம்பக்கூடும். இது தமிழக அரசு அமைப்புகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.

நீங்கள் IoT சாதனங்களை உருவாக்குபவராகவோ அல்லது அவற்றை இயக்குபவராகவோ இருந்தால், உங்கள் சான்றிதழ் பட்டியலை (CA Bundle) புதுப்பித்து, சாதனங்களுக்கான ஃபார்ம்வேர் அப்டேட்டை வழங்குங்கள். ஒரு கம்ப்யூட்டரை புதுப்பிக்க முடியாவிட்டால், அதை இண்டர்நெட் இணைப்பிலிருந்து துண்டித்து வையுங்கள்.

தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து அமைப்புகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்! தமிழக முதல்வர் அலுவலகம் , உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். eMudhra நிறுவனம், இந்தியாவில் வழங்கப்படும் தனது டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) மற்றும் eSign சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. டிஜிட்டல் நம்பகத்தன்மை என்பது அதைப் பாதுகாக்கும் ரகசிய கீக்களின் வலிமையைப் பொறுத்தே அமைகிறது" இவ்வாறு டிஆர்பி ராஜா எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+