கவின் கொடூரமான ஆள் போலயே.. ஹாலிவுட் படம் பார்த்து.. ரொம்பே மோசம்.. ரிதன்யா கேசில்.. திடுக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் ரிதன்யா கணவர் கவின் மிக மோசமான மனநிலை கொண்டவராக இருப்பார் என்றும் நெருங்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கவின் கடுமையான பாலியல் வறட்சி கொண்ட ஆள் போல செயல்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியை மன ரீதியாக மட்டுமன்றி உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. சில கடுமையான பாலியல் தொல்லைகளை கொடுத்ததாகவும்.. ஹாலிவுட் படங்களை பார்த்து அதில் உள்ள சில விஷயங்களை செய்ய சொல்லி வறுபுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வாழ்க்கையில் இதுவரை வேலைக்கே செல்லாத கவின் வீட்டில் இருந்தபடியே இப்படி மோசமான குணம் கொண்டவராக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tirupur

ரிதன்யாவிற்கு இதனால் உடலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளியாகும் பட்சத்தில் அதில் பல கொடுமையான தகவல்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

கவின் செய்த கொடுமை

வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா குறித்து அவரது தாயார் பல ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். தனது மகள் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிதன்யாவின் தாயார் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "என் மகள் குளியலறைக்குச் செல்லும்போது கூட கவின் தனியாக விடமாட்டார். கூடவே செல்வார். உள்ளே சென்று பின்னால் நின்று பார்ப்பாராம். நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டார்" என்று தெரிவித்தார்.

மேலும், "எனக்கு கூச்சமாக இருக்கிறது, இப்படிச் செய்யாதீர்கள், நாம் காதலித்து திருமணம் செய்யவில்லை, வீட்டில் பார்த்து முடிவு செய்த திருமணம். அதனால் எல்லாவற்றிற்கும் கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று சொன்னாலும் கூட அவர் கேட்க மாட்டார். பலமுறை கெஞ்சியும், அவர் பின்தொடர்ந்து அத்துமீறியதாக என் மகள் என்னிடம் தெரிவித்தார்" என்று ரிதன்யாவின் தாயார் கூறினார்.

ரிதன்யா தற்கொலை பின்னணி

ரிதன்யாவிற்கும், கவினுக்கும் கடந்த 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வோல்வோ சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமான முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் பெண்ணின் அப்பா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து அண்ணாதுரையும், அவரது ரிதன்யா அம்மாவும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும் கணவர் கவினிடம் ரிதன்யா கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் ஜூன் 28ம் தேதி நாள் காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரிதன்யாவின் தொலைபேசியிலிருந்து அவரது தாய்க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ரிதன்யாவின் கார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஓட்டுநர் இருக்கையில் ரிதன்யா மயக்க நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்ணாதுரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு அவரது மகள் எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளார். உடனடியாக அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ரிதன்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காரிலேயே பூச்சு மருந்து குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது பின்னர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+