விஜயகாந்த் உடல்நிலை இப்போது எப்படி இருக்கு.. கிரிக்கெட் போட்டி எல்லாம் பார்க்கிறாராம்.. புது தகவல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று விலகி இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அவரது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத உச்சநட்சத்திரமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.. ஒரு காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்து தமிழ் சினாமாவில் டாப் இடத்தில் இருந்தவர் விஜயகாந்த்.

இவர் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரையில் வந்தால் அவரது ரசிகர்களுக்கு ஒருவித பவர் வந்துவிடும். அந்தளவுக்குத் தமிழ் சினிமாவை ரூல் செய்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்த்: சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இருந்த போது தேமுதிக என்ற கட்சியைக் கடந்த 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தவர். முதல் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய விஜயகாந்த் அனைவரும் வியக்கும் வகையில் 8% வாக்குகளை வாங்கினார். அந்த தேர்தலில் அவரது கட்சி சார்பில் அவர் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வானார்.
தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த விஜயகாந்த் 2011 சட்டசபைத் தேர்தலை அதிமுக உடன் இணைந்து எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் 29 இடங்களை அவரது கட்சி கைப்பற்றியது. திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பிற்கும் வந்தார் விஜயகாந்த். அதன் பிறகு சட்டசபையிலேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பல சமயங்களில் கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
உடல்நிலை: இப்படி தமிழக அரசியலில் முக்கியமான இடத்தில் இருந்தவர் விஜயகாந்த். இருப்பினும், அதன் பிறகு அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்பு போல அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடிவதில்லை. இப்போது அவருக்கு 71 வயதாகிறது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தே வருகிறார். அவருக்குப் பதிலாக அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தான் கட்சி பணிகளைக் கவனித்து வருகிறார்.
மேலும், அவரது மகன் விஜய பிரபாகரனும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உடல்நலக்குறைவால் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் நிலையில், அவ்வப்போது அவரது போட்டோக்கள் மட்டும் வெளியாகும். இதுவே அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரிய பூஸ்டாக இருந்து வருகிறது. இருப்பினும், அவர் மீண்டும் பழையபடி அரசியலில் வலம் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

இப்போது எப்படி இருக்கு: இதற்கிடையே நேற்றைய தினம் உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வர்ணனையில் பேசிக் கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி, கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா 32ஆவது ஓவரை போட்டுக் கொண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜி, கேப்டன் விஜயகாந்த் மகனிடம் பேசியதாகவும் விஜயகாந்த் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆர்ஜே பாலாஜி மேலும் கூறுகையில், "ரசிகர்களுக்கும் தமிழில் வர்ணனை செய்வோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. கேப்டன் விஜயகாந்த் மகனைச் சமீபத்தில் சந்தித்திருந்தேன். அப்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் விஜயகாந்த் பார்ப்பதாகவும் அதுவும் தமிழ் வர்ணனையில் பார்ப்பதாகவும் அவரது மகன் கூறினார்.. தமிழ் வர்ணனை சிறப்பாக இருப்பதாக விஜயகாந்த் கூறியதாக அவரது மகன் சொன்னார். இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
விஜயகாந்த் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதும் அவர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிப்பதாக அவரது மனகே கூறியுள்ளது விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications