மேற்குவங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்! தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் அறிவிப்பு
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்க ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஷ்வநாத்துக்கு தமிழ ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் சமயத்தில் அவர் மாற்றப்பட்டிருப்பத அரசியல் ரீதியாக கனவம் பெற்றுள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல்
தமிழகம், மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கு மத்தியில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு முன் அவர் ராஜினாமா செய்வது கவனம் பெற்று இருக்கிறது. இதுமட்டுமின்றி காலியாக உள்ள மேற்கு வங்க ஆளுநர் இடத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மாற்றப்பட்டிருக்கிறார்.
தமிழக ஆளுநர் ரவி மாற்றம்?
இதன் மூலம் தமிழகத்திற்கு புது ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டதாவது:- "மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்ததுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் ராஜினாமாவிற்கான காரணங்கள் இந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை.
என்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை
மத்திய உள்துறை அமைச்சர், ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று எனக்கு தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் நிலவும் நடைமுறைக்கு ஏற்ப என்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உத்வேகத்தை பாதிப்பதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே பாதிக்கின்றன. மத்திய அரசு கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கொள்கையை மதித்து, மாநிலங்களின் மரியாதையையும் ஜனநாயக மரபுகளையும் பாதிக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை தவிர்க்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் - தமிழக அரசு
தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகின்றன. தமிழக அர்சு நிறைவேற்றி அனுப்பும் திட்டங்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறார் என தமிழக அரசு கூறி வருகிறது. ஆளுநர் ரவி மாற்றப்பட்டால், திமுக அரசுக்கும் - ஆளுநருக்கு இடையே இருந்து வரும் மோதல் போக்கு முடிவுக்கு வரும் எனவும் பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மாற்றப்படுவாரா அல்லது கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா செய்தது, தமிழக ஆளுநர் மாற்றப்படுவது உள்ளிட்டவை அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications