ஆளுநர் மாளிகையே தமிழ்நாடு அரசு சொத்து தான்.. ரோஷம் இருந்தா.. வெளியேறுங்கள்.. பாய்ந்து வரும் திமுக!
சென்னை: ஆளுநர் மாளிகை tea-க்கு தமிழ்நாடு அரசின் காசு வேண்டும். ஆனால் அழைப்பிதழில் தமிழ்நாடு எனும் வார்த்தையும்,தமிழ்நாடு அரசின் சின்னமும் இருக்காதா ஆளுநர் ரவி? என்று திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
12ம் தேதி மாலை இந்த பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. தமிழ்நாடு- தமிழக வார்த்தை பிரயோகம் சர்ச்சை ஆன நிலையில், ஆளுநர் தற்போது அனுப்பி இருக்கும் இந்த கடிதமும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு இலட்சினையும் இதில் நீக்கப்பட்டு உள்ளது.

நீக்கம்
இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவியை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆர். என் ரவிக்கு எதிராக டேக் ஒன்று டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. GetOutRavi என்ற டேக் இணையத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில் தற்போது இந்த டேக் டிரெண்டாகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். அவர் தமிழ்நாட்டில் இருந்தே மொத்தமாக வெளியேற வேண்டும். அவர் தமிழ்நாட்டில் தமிழர்கள் வரிப்பணத்தில் இருக்க கூடாது என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.

விமர்சனம்
திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இது தொடர்பாக செய்துள்ள ட்விட்டில், ஆளுநர் மாளிகை tea-க்கு தமிழ்நாடு அரசின் காசு வேனும் ஆனால் அழைப்பிதழில் தமிழ்நாடு எனும் வார்த்தையும்,தமிழ்நாடு அரசின் சின்னமும் இருக்காதா ஆளுநர் ரவி? ஆளுநர் மாளிகையே தமிழ்நாடு அரசின் சொத்து தான் .. ரோஷப்பட்டு வெளியேறுங்கள் mr ravi.... பார்ப்போம்!! என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐடி விங்
திமுக ஐடி விங் சார்பாக செய்யப்பட்டுள்ள ட்விட்டில், சமத்துவத்திற்காக போராடி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர், நவீன தமிழகத்தை கட்டமைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயரை சொல்ல மறுத்து, சனாதன கொள்கைகளை ஆளுநர் அவைக்குள் கொண்டு வர முயல்வது ஏற்புடையது அல்ல. , என்று குறிப்பிட்டு உள்ளனர். சனாதன கொள்கைகளை புகுத்த முயன்ற ஆளுநரின் முயற்சிகளை நேருக்கு நேர் கண்டித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சரின் இந்த எதிர்வினையை எதிர்கொள்ள முடியாமல், பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநரின் செயல், மக்களிடம் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது., என்று குறிப்பிட்டு உள்ளனர்.

செந்தில் குமார்
திமுக எம்பி செந்தில் குமார் செய்துள்ள ட்விட்டில், கவர்னர் ரவி சட்டசபையில் ஆற்றிய உரையில் சேர்த்தல் மற்றும் விடுபட்ட செயலை ஆதரிப்பவர்களுக்கு ஓர் எளிய கேள்விக்கு பதிலளிக்கவும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையில் விருப்பமான வார்த்தைகளைச் சேர்க்கவும்,உரைகளை நீக்கவும் நரேந்திர அரசு அனுமதிக்குமா? இக்கேள்வியில் உங்களுக்கான பதில் உள்ளது. வானதி மேடம் அசிங்கப்படுத்திட்டாங்கனு சொல்றிங்க ஆனா உங்க கட்சியில் சிலர் அவரு எதோ சாதித்தது போல் பதிவிடறாங்க சீனியர் நீங்க சொல்றது தான் சரியா இருக்கும். ஆளுநர் எல்லை மற்றும் அதிகார வரம்பு மீறி செயல்பட்டதால் அசிங்கப்பட்டார் என்ற உண்மையை உரக்க சொல்லுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications