தடுமாறும் தாம்பரம்.. இங்க இருந்து ரோடு எங்க சார்.. திணறும் சென்னையின் புறநகர் பகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் சாலை வாகன ஓட்டிகள் செல்லும் நிலையில் இல்லை.

சென்னை மாநகரம் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து விட்டது. அதனால் சென்னைக்குள் மூன்று மாநகராட்சிகள் உள்ளன. சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னையின் சாலை கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ஆவடி மற்றும் தாம்பரம் பகுதிகளில் சாலை கட்டமைப்பு பணிகள் மந்த வேகத்திலேயே நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

Roads in the suburbs of Chennai are very bad: Especially Tambaram Mudichur road is not passable for motorists

சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்து அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் 388 கிலோ மீட்டர் நீளத்திற்கு 471 பேருந்து தட சாலைகள், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 658 கிலோ மீட்டர் நீளத்தில் 35 ஆயிரத்து 111 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆயிரத்து 509 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்து 934 சாலைகளில், ஆயிரத்து 670 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, 255 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 9 சாலைகளில் நிரந்தர சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக சாலை அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ள 527 சாலைகளில் 294 சாலைப் பணிகள் முடிவு பெற்று, 211 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள 22 சாலைப் பணிகள், வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். வெள்ள மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 685.68 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளன. நடப்பாண்டில் 170.65 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலை பணிகள் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியாகும் நிலையில், தாம்பரத்தில் மற்றும் ஆவடியில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.. சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சாலைகள் மோசமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குமுறுகிறார்கள்.. இதேபோல் சென்னையின் புறநகரை ஓட்டிய பகுதிளான கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் முடியாததால் சாலைகள் மோசமாக உள்ளது.

தாம்பரம் முடிச்சூர் சாலையில் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னையில் பள்ளிக்கரணையில் காமாட்சி மருத்துவமனையை ஓட்டிய பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன. இதேபோல், மடிப்பாக்கம் தெற்கு பகுதிகள், ஐய்யப்பந்தாங்கல் பூந்தமல்லி சாலையும் , ஆவடியின் நகர்ப்புற சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+