சென்னை - திருச்சி ஹைவேயில் திக் திக் சம்பவம்! காரில் சென்ற குடும்பத்தினரை 5 கி.மீ துரத்திய நபர்கள்
சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் கார் ஒன்றை போதையில் இளைஞர்கள் 5 கிமீ தூரம் துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர், சிறுமிகள் என குடும்பத்தோடு காரில் பயணம் செய்த தனியார் வங்கி ஊழியரின் காரை, போதையில் 3 இளைஞர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் விரட்டி சென்ற வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி. திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் இவர், வார விடுமுறைக்காக சென்னை வந்து உள்ளார். பின்னர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திண்டுக்கல்லுக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார். ஹைவேயில் பயணம் செய்வதால் பயண களைப்பு தெரியாமல் காரில் பாடலை ஒலிக்க விட்டபடி சஞ்சீவ் காரை ஓட்டி வந்தார்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அருகே திருநாவலூர் அருகே கார் வந்த போது, பைக்கில் வந்த மூன்று பேர் திடீரென இவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரே பைக்கில் வந்த மூன்று பேரும் மது போதையில் இருந்துள்ளனர். காரில் வந்த பெண், குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் கூட ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, காரை பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர்.
5 கி.மீ தூரம் விரட்டியுள்ளனர்
சஞ்சீவ் காரை வேகமாக செலுத்தினாலும் கூட போதையில் இருந்த அந்த இளைஞர்கள் பைக்கை வேகமாக ஓட்டி வந்து மிரட்டினர். காரின் சைடு மிரரை அடித்து நொறுக்க முயற்சித்ததோடு, வாய்கூசும் வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.. காரை நிறுத்த சொல்வது போல கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையில் துரத்தி சென்றனர். இதனால் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் உதவி கேடுள்ளார் சஞ்சீவ். அதற்குள் பைக்கில் வந்த கும்பல், காரின் பின்பக்க கண்ணாடியை கையில் வைத்து இருந்த பொருளால் அடித்து நொறுக்கியுள்ளது.

இதனால், காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் அச்சத்தில் அலறினர். இதைக்கவனித்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். இதனால், பைக்கில் வந்த போதை இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, காரை ஓட்டி சென்ற சஞ்சீவி, உளுந்தூர்பேட்டைக்கு முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
அலட்சியமாக பதில் அளித்த போலீசார்?
ஆனால், அங்கிருந்த போலீசாரோ.. அருகில்தான் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி உள்ளது அங்கு செல்லுங்கள் என்று அலட்சியமாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சக வாகன ஓட்டிகள், போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் வந்தவர்களிடம் இப்படி அத்துமீறி நடந்து இருக்கிறார்கள்.. வண்டியை புடிக்க முடியுமா முடியாதா.. என போலீசாருடன் அங்கிருந்த வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் டூவிலர் கஞ்சா போதையில் குடும்பத்தினரை மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் குடும்பத்துடன் வருபவர்களை குறி வைத்து
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன் வருபவர்களை குறிவைத்து கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்பது மிகவும் பரபரப்புமிக்க சாலைகளில் ஒன்றாகும்.

சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். எப்போதும், கார்கள், பேருந்துகள், லாரிகள் அணிவகுத்து செல்லும் இந்த சாலையில் பட்ட பகலில் இப்படியான ஒரு துணிகர சம்பவம் நடைபெற்று இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இணையத்தில் பரவும் வீடியோ
காரில் சென்றவர்களை போதை இளைஞர்கள் துரத்தி செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் அடிக்கடி ரோந்து நடவடிக்கை மேற்கோண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications