துப்புரவு தொழிலாளி மகன் டூ ரோபோடிக்ஸ் சிஇஒ.. 'தமிழ் புதல்வன் திட்டம்' குறித்து நெகிழ்ச்சி பதிவு
சென்னை: "தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தப்பட்ட "காலை உணவு திட்டம்" இரண்டும் என் போன்ற பல விளிம்பு நிலை மாணவர்களை, முதல் தலைமுறை பட்டதாரியாக நிச்சயம் மாற்றும் என ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO கென்னித்ராஜ் அன்பு பதிவிட்டுள்ளார்.
ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவியர் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை முன்பு முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த திட்டம் காரணமாக 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.

உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப்பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
இதனிடையே அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை-எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும்,அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ், 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களின் கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வியாண்டு முதல், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்கள் அடிப்படை கல்வி பயில முன்வர வேண்டும் என்பதற்காகவும், ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காவும் கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு திட்டத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை அரசியல் கட்சி தலைவர்களை தாண்டி பலரும் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO கென்னித்ராஜ் அன்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆக அல்ல ! துப்புரவு தொழிலாளியின் மகனாக வாழ்வை துவங்கி இன்று ரோபோடிக்ஸ் & AI நிறுவன CEO ஆக மாரி இருக்கும் , தமிழ்நாடு அரசின் அரசுப்பள்ளி, சத்துணவு திட்டத்தால் பயனடைந்த மாணவனாக சொல்கிறேன், "தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தபட்ட "காலை உணவு திட்டம்" இரண்டும் என் போன்ற பல விளிம்பு நிலை மாணவர்களை, முதல் தலைமுறை பட்டதாரியாக நிச்சயம் மாற்றும்" என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications