Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபத்தைத் தடுக்கும் ரோலிங் பேர்ரியர் - நீலகிரியை ஜப்பான் தரத்திற்கு மாற்றிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: ஏழைகளின் இளவரசி என்பார்கள் உதகையை. ஆகவேதான் கோடைக்காலங்கள் வரும்போது மக்கள் இந்தக் கோடை வாசஸ்தலம் நோக்கிப் படை எடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இப்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதை முன்பே உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் மூலம் விபத்து இல்லாத மலையாக மாறி இருக்கிறது ஊட்டி.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு இந்த உதகை மலைக்கு 35 லட்சம் சுற்றுலாவாசிகள் வந்து செல்கிறார்கள். இந்த மாவட்டத்திற்கான வருமானம் சுற்றுலா மூலமாகவே கிடைக்கிறது. இங்குள்ள மக்களும் சுற்றுலாவை நம்பியே தங்களின் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

ஆனால் மலைப் பகுதியை விரும்பி வரும் மக்கள் முறையான பாதுகாப்புடன் பயணிப்பதில்லை. கவனக்குறைவான வாகனத்தை ஓட்டிச் செல்வதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. உதகை செல்லும் பாதையான கல்லட்டி மலைப்பாதை என்பது மிகவும் செங்குத்தானது.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

ஆகவே ஏறும் போது நடக்கும் விபத்துகளைவிட, இறங்கும் போது ஏற்படும் விபத்துகள் அதிகம். காரணம் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றன. இந்தப் பகுதியில் மட்டும்

மொத்தம் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஆகவே விபத்துகள் பெருகிவிடுகின்றன.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

இதனை உணர்ந்து முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி பொதுப்பணித்துறை பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது. அதுவும் ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன். இந்தச் சாலைகளில் தற்போது உருளை வடிவிலான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 90% சதவீத விபத்துகளைத் தவிர்க்கமுடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

"மலைச் சாலைகளில் மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படும். அதைத் தடுக்கமுடியாது. மலைப்பாதை முழுவதும் தடுப்புச்சுவர் கட்டினால் இதை முற்றிலுமாக தடுக்கலாம்.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

ஆனால் அதற்கு பெரும் நிதி தேவையாகும். அதைவிடக் குறைவான பட்ஜெட்டில் ஏதேனும் நவீனத் தொழில்நுட்பம் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் ஹைட்ரோ சீடிங் முறையை வைத்து இந்த மண் சரிவைத் தடுக்கலாம் என அறிந்தோம். சரி, முதன்முறையாகப் பரிசோதனை முறையில் செய்து பார்க்கலாம் என அரசு முடிவு செய்தது. அதற்கான பொறியாளர்களை டெல்லியிலிருந்து அழைத்து வந்தோம்.

இந்த முறை எப்படி என்றால், மலையோரமாக உள்ள பக்கவாட்டு மண் மீது வலை அடிக்கிறார்கள். அந்த வலை பிய்த்துக்கொள்ளாமல் தாங்கிப் பிடிக்கப் பெரிய இரும்பு ஆணிகளைப் புதைக்கிறார்கள். அந்த வலைகளில் மீது புல் விதைகளைத் தூதுவிடுகிறார்கள்.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

அந்த மண்ணைப் பிடித்துக் கொண்டு புற்கள் மழைக்காலங்களில் வளர ஆரம்பிக்கின்றன. ஆகவே மண்சரிவு பெரிய அளவில் குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை புதியதாக பொதுப்பணித்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது" என்கிறார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

ரகு, "இந்த மலைப்பகுதியைப் பொறுத்தவரை ஜூன் தொடங்கி நவம்பர் மாசம் வரை தொடர்ந்து மழைபெய்யும். இந்த மழைக்காலங்களில் சாலை ஓரமாக மண்சரிவு அடிக்கடி நடக்கும். கடந்த முறை மூன்று 4 முறைக்கு மேல் மண்சரிவு நடந்தது. சாலையில் இப்படி மண் சரிவு நடப்பதால், வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்குத் தடங்கல் ஏற்பட்டுவிடும்.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

ஆனால் கடந்த வருடம் மண்சரிவை தடுக்க ஏதோ இரும்புக் கம்பிகளைப் புதைத்து அதன் மீது புற்களைப் பதித்தார்கள். நல்ல பசுமை பிடித்து வளர்ந்தது. இதற்கு முன்னால் மண் சரிவு ஏற்பட்டால் வீடுகள் பாதிக்கப்படும். மழை வெள்ளம் வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் இந்த முறை மழையில் எந்தப் பாதிப்பும் இல்லை" என்கிறார் இந்த நீலகிரி மலைவாசி.

மாவட்ட ஆட்சியர் அம்ரித், "நீலகிரி மலைப்பிரதேசம் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு காலங்களிலும் மழையை அதிகமாகப் பெறக்கூடிய மாவட்டம். அந்தக் காலங்களில் சாலையோரமாக மண்சரிவு, சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படுவது இயற்கை.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

அப்படி சாலையோர மண்சரிவு ஏற்பட்டால் பெரிய அளவில் போக்குவரத்து தடைப்படும். ஆகவே அதைத் தடுப்பதற்கான நவீன முறையை, அதாவது சாயல் நெய்லிங் முறையைக் கண்டறிந்து செயல்படுத்தினோம். ஆகவே அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த மழைக் காலத்தில் ஏற்படவில்லை. முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.

அதைப்போன்றே இப்போது கல்லட்டி, தெப்பக்காடு போகின்ற சாலைகள் முழுவதும் இந்த ரப்பர் வளைவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆங்கிலத்தில் Rolling barrier system wikipedia என்பது பெயர். இதை அனைத்து மலைப் பாதைக்கும் வரும் நாளில் விரிவுபடுத்த உள்ளோம்." என்கிறார்

ஜோபி ஆண்டனி, "இந்த மலைப்பாதையில்தான் நான் ஆம்புலன்ஸ் டிரைவராக தினமும் வாகனத்தை இயக்கி வருகிறேன். மழைக்காலம் என்றில்லை, வேறு சில காலங்களிலும் பயந்து பயந்துதான் வாகனத்தை இயக்க வேண்டி இருக்கும். அந்தளவுக்கு அபாயகரமான மலைப்பாதை இது.

 Roller crash barriers installed for first time in Tamil Nadu

இதற்கு முன்பே கூட பல தொலைக்காட்சிகளில் இதைப் பேய் சாலை என்று செய்தி போட்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் பாதை வழியே பயணிப்பவர்கள் அஞ்சுவார்கள். உண்மையாக அந்தளவுக்கு அபாயம் அல்ல. பலருக்கு டிரைவிங் செய்யத் தெரியாமல் விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்தச் சாலையில் பயணிக்கும் போது முதல் கியர், இரண்டாவது கியர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரேக் அதிகம் பயன்படுத்தாமல் வாகனத்தை இயக்க வேண்டும். அது தெரியாமல் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்" என்றார்.

இந்த மலைப்பாதையில் ஏற்படும் வாகனங்களில் உள்ளவர்களைக் காப்பாற்றும் நோக்கில் அரசு இலவச ஆன்புலன்ஸ் சேவை தரப்பட்டுள்ளது. அதில் இவர் கடந்த 2010 முதல் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். முன்பு எல்லாம் தினம் ஒரு விபத்தைச் சந்தித்துவந்த இவர், இப்போது அந்தளவுக்கு இல்லை என்கிறார்.

தலைகுந்தா பகுதியில் போடப்பட்டுள்ள செக்போஸ்ட் மூலம் பல விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன என்கிறார். அதேபோல் கல்லட்டி வாகன சோதனை சாவடியிலும் காவல்துறை தொடர்ந்து இருப்பதால், கண்காணிப்பு முறைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.

இப்படி இந்த மலைப்பாதை மிக ஆபத்தாக உள்ளதை அறிந்து, அமைச்சர் எ.வ.வேலு, நவீன தரத்திலான தடுப்புச் சுவர்களை அமைத்துள்ளார். இது மலைப்பாதையில் வண்டிகள் வந்து மோதும் போது அதில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் உருளைகள் வண்டியை அப்படியே தடுத்துச் சரியான திசைக்குத் திருப்பிவிடும். அதன் மூலம் பல விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன.

இதைச் சிறப்பான செயல் என்கிறார்கள் மலைப்பாதையைக் கடக்கும் வாகன ஓட்டிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+