‘ரூட்டு தல’ சண்டை.. கத்தி கட்டைகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. போலீசை பார்த்ததும் ஒரே ஓட்டம்!
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட 'ரூட்டு தல' பிரச்சனையால் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து ஒன்று அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில் நின்ற போது பேருந்தில் இருந்த ஒரு பிரிவு மாணவரை மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் கீழே கிடந்த கற்களாலும், மதுபாட்டில்களை கொண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவலின் பேரில் அரும்பாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும், மாணவர்கள் கையில் கத்தியோடும், கட்டைகளோடும் சாலையில் நாலாபுறம் தெறித்து ஓடினர். பேருந்துகளிலும் சிலர் ஏறி தப்பித்தனர். சில மாணவர்கள் சாலையில் செல்லும் ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார், 17 மாணவர்களை ரவுண்டு கட்டி பிடித்துள்ளனர். மாணவர்களிடையே விசாரணை நடத்தியதில், 'ரூட்டு தல' பிரச்சனை காரணமாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே 'ரூட்டு தல' பிரச்சனை ஏற்பட்டு, இரு பிரிவினர் மாறி மாறி வெட்டி கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டும் 'ரூட்டு தல' பிரச்சனையை தடுக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications