பட்டாகத்தியுடன் ரவுடிகள் மிரட்டுறாங்க! சென்னை கமிஷனர் ஆபிசில் குடும்பத்துடன் மெக்கானிக் போராட்டம்
சென்னை: கடைக்கு முன்பாக வந்து பட்டா கத்தியில் கேக் வெட்டும் ரவுடிகள் என்னையும் மிரட்டுகிறார்கள். போலீசில் புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் குடும்பத்துடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரவுடிகள் தனது கடைக்கு முன்பாக வந்து பட்டாகத்தியால் கேக் வெட்டுவதோடு, அவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் நான் தான் புகார் கொடுத்தேன் என்பதால் எனது கடையையும் அடித்து சேதப்படுத்திவிட்டதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சரவணன் பேட்டியின் போது கூறியதாவது:-

எனது பெயர் சரவணன். சைதாப்பேட்டை சாஸ்திரி முதல் தெருவில் நான் மெக்கானிக் கடை வைத்து இருக்கிறேன். எனது கடை இருக்கும் இடத்தில் ரவுடிகள் தொடர்ந்து பட்டாகத்தியால் கேக் வெட்டுகிறார்கள். அந்த இடத்தில் 3-வது கடையாக நான் வைத்திருக்கிறேன். கேக் வெட்டும் ரவுடிகள் என்னை வந்து மிரட்டுகிறார்கள். நீ ஏன் கடை திறந்து வைத்திருக்கிறாய்.. நீதான் வீடியோ எடுத்து போடுகிறாயா.. இதெல்லாம் உன் வேலைதானா.. என மிரட்டுகிறார்கள்...
இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டரிடமும் கமிஷனரிடமும் நான் எத்தனையோ முறை புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் நடவடிக்கையே எடுக்கல. இதற்கு அப்புறம் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு போய் வழக்கு தொடர்ந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்க என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கல.. நாங்கள் யார் மீது புகார் கொடுத்தோமோ அதே நபர்கள் மீண்டும் வந்து மிரட்டுகிறார்கள்.

நான் மறுபடியும் புகார் கொடுத்த போதும் என்னை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. அதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. என் வாழ்வாதாரமே போச்சு.. இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் பொது இடத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டிவிட்டு கும்பல் கும்பலாக நின்று அநாகரிக செயலில் ஈடுபடுகிறார்கள். எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள் நீதான் புகார் கொடுத்து இருக்கிறாய் என எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
நான் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என சொல்லும் போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் ரவுடிகள் என்னை தாக்கியிருக்க மாட்டார்கள். நான் எல்லா ஆதராமும் கொடுத்துவிட்டேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும் ரவுடிகள் மேல நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட மெக்கானிக் கூறினார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போராட்டம் நடத்தியதால் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications