சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை.. தப்பியோடிய மர்ம நபர்கள்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி ஆதி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜமங்கலத்தை சேர்ந்த ரவுடி ஆதியின் மனைவி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்க்க வந்த போது தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் வெட்டி படு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள காத்திருப்போர் நிற்கும் இடத்தில் ஏராளமானோர் நின்றிருந்த நிலையில், ஆதியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்வதை நேரில் பார்த்தவர்கள் தெறித்து ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மனைவியை பார்க்க வந்தபோது வெட்டு
ராஜமங்கலத்தை சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவர். இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. இவரது மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி பிரசவத்திற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் மருத்துவமனைக்கு வந்த ஆதியை ஹெல்மட் அணிந்தபடி வந்த 4 பேர் கும்பல் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
தப்பி ஓடிய கும்பல்
மருத்துவமனையில் பின்புறம் பிரசவ வார்டுக்கு கீழே காத்திருப்போர் நிற்கும் இடத்தில் நின்ற ஆதியை அந்த கும்பலினர் திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் அங்கிருந்தவர் பயந்து நாலாபுறம் ஓடினர். கும்பல் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் ஆதி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். இதையடுத்து அங்கு காவலுக்கு நின்ற போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பழிக்கு பழி வாங்கல் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மிகுந்த வேதனைக்குரியது - எடப்பாடி
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- "தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.
பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை..
பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.
தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
இதேபோல் டிடிவி தினகரனும் இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- "சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை - சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சட்டம், ஒழுங்கு சீர்கேடு
தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.
எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை -
தூக்கி தூக்கி போடும் மத்திய கைலாஷ் எல் வடிவ பாலம்! பார்த்தாலே அஞ்சும் வாகன ஓட்டிகள்! அன்புமணி அட்டாக் -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்? -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
பட்டா மாறுதல் செய்ய இதோ ஆன்லைனில் ஈஸி வழி? லோன் கிடைப்பதில் சிக்கல்? 24 மணி நேரத்தில் தீர்வு -
முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை -
நடுவானில் யூடர்ன் போட்ட சென்னை விமானம்.. துபாயில் தரையிறங்க முடியாததால் மீண்டும் திரும்பியது! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications