துபாய்க்காரன் வந்துருவான்.. காலம்போன கடைசியில் ஒரு கிழவனை பிடிச்சிட்டு.. ரவுடிபேபி சூர்யா கண்ணீர்
சென்னை: "துபாய்க்காரன் 4 மாசத்துல வந்துடுவான்... நான் பார்த்துக்கிறேன் இனி என் வாழ்க்கையை. இனிமே சூர்யான்னு.. வருவியா... வந்தா அவ்ளோதான்" என்று சிக்காவுக்கு எச்சரித்து ரவுடிபேபி சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக்டாக்கை தடை செய்தாலும், அதை வைத்து கேமரா வெளிச்சத்தை தேடி கொண்ட சில பிரபலங்களை கட்டுப்படுத்த முடியவில்லை..
அவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் சம்பந்தப்பட்ட சேனல்களை தடை செய்யுமாறு பொதுமக்கள் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குடித்தனம்
அப்படிப்பட்ட 2 பேர்தான் ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடிகள்.. இருவருக்கும் தனித்தனியாக கல்யாணமாகி, இருவருக்கும் குடும்பம் குட்டிகள் இருந்தாலும், தங்கள் குடும்பங்களை மறந்து இவர்கள் ஒன்றாக குடியிருந்தார்கள்.. குடித்தனம் நடத்தினார்கள்.. ஆளுக்கொரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள்.. 2 வருடம் கழித்து இருவரும் பிரிந்துவிட்டனர்.. மனைவியுடனேயே சிக்கா சேர்ந்துவாழ முடிவெடுத்துவிட்ட நிலையில், சூர்யா நொந்து போனதாக தெரிகிறது.. இதனால், கண்ணீர் வடித்து அவர் பதிவிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் உள்ளதாவது:

ஒழுக்கமா இரு
"மக்களிடம் நல்லவன் போல காட்டுவதற்காக, என்னை காப்பாற்ற இங்கே வருவதா சொல்லிக்கிற.. இருந்தா ஒழுக்கமா.....இரு.. இல்லைன்னா ஓடிரு. ஒன்னு நீ உன் குடும்பத்தோடு வாழு... இல்லை, என்னை எவன் கூடவாவது வாழ விடு.. ரெண்டும் கெட்டானா, அவன் கூடையும் வாழ விடமாட்ற... நீயும் வாழ மாட்டுற. தேவையில்லாம நடிக்கக்கூடாது.. சும்மா சும்மா அப்பப்போ வந்து போறதா? பந்தா காமிக்கிறியா, இந்த பந்தாவெல்லாம் காட்டாத. நேற்று வந்தான், அப்புறம் போன் அடிக்கிறேன் எடுக்க மாட்றான்.

வீடியோ
தயவு செஞ்சு குடும்பத்தோட வாழ்ந்துக்கோ... இல்லை... என் குடும்பத்தோட வாழ விடு. சும்மா சும்மா தொல்லை பண்ணாத. நான் திருப்பூர் போகத்தான் போறேன். அவன்(கணவர்) வர்றவனையும், வரக்கூடாதுனு சொல்லிட்ட.. ஆனால் அவன் என்னை அசிங்க அசிங்கமா கேட்கிறான்.. "அவன்(சிக்கா) யாரு? என் பொண்டாட்டியை உரிமை கொண்டாடுறான்னு' கேக்கறான்..

குழப்பம்
எல்லா வீடியோவும் அவன் பார்த்துட்டு தான் இருக்கான்... உனக்கு மட்டும் குடும்பம் வேணும், நான் என்ன மட்டும் நடுத்தெருவில் நிற்கணுமா? என்ன சொல்றதுன்னே தெரியல... சீரழிந்து சின்னாபின்னமா உட்கார்ந்து இருக்கேன்... சம்பாதிக்க வழியிருந்தும்.. கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு போனா, எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம் உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் யூடியூப்ல வந்து உட்கார்ந்து இருக்கேன். வாழ்க்கை ஒரே குழப்பமாக இருக்கு. திருப்பூரில் நிம்மதியா இருந்தேன்..

சிக்கா
இந்த சிக்கா ஒரு ஆளுன்னு நினைச்சி, மதுரை வந்தேன். இவன் என்னை படுத்தறான்.. எனக்கு பாதுகாப்புனா மட்டும் இவன் வருவானாம். நீ என்ன பாதுகாப்பு தர்றா... நான் என் பாதுகாப்புக்கு யாரையாவது ஏற்பாடு செய்துக்க முடியாதா.. 2 வருஷமாக காதல் பண்ணான்? இரண்டு வருஷம் நான் சம்பாதித்ததை நல்லா தின்னான். இப்போ என்னை இங்கே கூட்டி வந்துவிட்டு, அவன் அவனோட குடும்பத்தோட போனா எப்படி? இப்போ நினைச்சாலும் என்னால இன்னொரு லைஃப் உருவாக்க முடியும். இவன் என்னமோ.. குடும்பத்தோட போறேன் போறேன்னு சொல்றான். நானா உன் குடும்பத்தை பிரிச்சேன்... எனக்கு நல்ல லைஃப் இருந்திருக்கும்.. நானே கெடுத்துட்டேன்.

சீதையா?
அவன் பெரிய ராமன், நான் என்ன சீதையா? 5 நிமிஷத்துல விட்டுட்டு போனா, பிக்கப் பண்ணி சுத்திவர்றதுக்கு ஏகப்பட்ட பேரு வலை போட காத்திருக்கான்.. வீடு வரைக்கும் புரபோஸ் பண்ண வந்துடறாங்க.. காலம் போன கடைசியில் ஒரு கிழவனை பிடிச்சிட்டு, வெளியே போனா உங்க தாத்தாவா, அப்பாவானு கேட்டாங்க தெரியுமா? எனக்கு அவ்ளோ அசிங்கமா இருந்துச்சு. இந்த மாதிரி உடம்பு இருக்கும் போதே, இவனுக்கு இவ்வளவு ஆட்டம்...

துபாய்க்காரன்
துபாய்க்காரன் 4 மாசத்துல வந்துடுவான்... நான் பார்த்துக்கிறேன் இனி என் வாழ்க்கையை. இனிமே சூர்யான்னு.. வருவியா... வந்தா.. அவ்வளவுதான்.. நீ எவ்வளவு பெரிய கேடினு, நான் போனதும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். இரண்டு வருசம் அவனுக்கு வருமானம் இல்லை... என் யூடியூப் நல்லா வருமானம் வந்ததும், என்னிடம் வந்தான்...

வாழ்க்கை
சுயநலத்திற்காக என்னிடம் வந்தான். போ... போய் உன் வாழ்க்கையை பாரு... என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்.. 2 வருஷம், நல்லா ஜாலியா இருந்தான்... நல்லா அனுபவிச்சான்.. இப்போ போய்ட்டான். தாலி கட்டாத குடும்பம், நல்லாவே இருக்காது.. சொல்லாம போய் உன் குடும்பத்தோடு சேர வேண்டியதுதானே.. எதுக்கு வந்து வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்கே? எனக்கு எப்படி இருக்கும்?ன்னு சொல்லுங்க பார்ப்போம்.. கடவுளை மட்டும்தான் நம்பி இருக்கேன்.. என்று வேதனையுடன் அதில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications