சென்னையில் போலீசார் அதிரடி என்கவுண்ட்டர்- ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
சென்னை: சென்னை அயானவரத்தில் போலீசார் நடத்திய எனகவுண்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னையில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரவுடி சங்கரை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ரவுடி சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சங்கர் மீது 37 வழக்குகள்
சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி காவலர் சுப்பிரமணியன் மற்றும் ரவுடி துரைமுத்தும் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையில் என்கவுண்டர் நடைபெற்றது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications