சுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்!
21 வயது ரவுடியை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்
சென்னை: சுடுகாட்டிலேயே வைத்து 21 வயசு ரவுடியின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார். 21 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த பகுதியில் இவர் ரவுடியாக வலம் வந்துள்ளார்.

இவர் மீது பல ஸ்டேஷனில் திருட்டு, வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் போரூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர்மீது கொலை வழக்கும் உள்ளது. இவருக்கு கல்யாணமும் ஆகிவிட்டது. மனைவி பெயர் வினிதா.
நேற்று முன்தினம் வசந்தகுமார், நண்பர்களுடன் வெளியே போனவர் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் அவரை வீட்டில் உள்ளவர்கள் தேடிய நிலையில், சுடுகாட்டில் தகன மேடை அருகே பிணமாக கிடந்தார் வசந்தகுமார்.
கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று, முட்புதர்களுக்கு நடுவில் உடலை யாரோ வீசிவிட்டு சென்றுள்ளதை கண்டு பதறிய குடும்பத்தார், உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.
விரைந்து வந்த போலீசார், வசந்தகுமார் உடலை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர். மோப்ப நாய் வந்தும் ஒரு தடயமும் சிக்கவில்லை. சம்பவத்தன்று நண்பர்களுடன் வசந்தகுமார், தண்ணி அடித்துள்ளார் என்று மட்டும் தெரியவந்துள்ளது. ஒருவேளை போதையில் ஏதாவது தகராறு நடந்து இந்த கொலை நடந்ததா? என தெரியவில்லை.
3 மாதத்துக்கு முன்பு, போரூர் ஏரியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் வசந்தகுமார் கைதாகி, ஜெயிலில் இருந்து சமீபத்தால்தான் வெளியே வந்தார். அதனால் இந்த விவகாரத்தில் யாராவது கொலை செய்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. எனினும் சுடுகாட்டிலேயே வைத்து ரவுடியை கழுத்தை அறுத்து கொன்றது யார், என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications