ரவுடி நாகேந்திரன் சாகவில்லை! பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்பவிட்டது.. ஆம்ஸ்ட்ராங் சகோதரர் புகார்
சென்னை: பிரபல ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை என சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி தாதா நாகேந்திரன் இறக்கவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நாகேந்திரனை அரசு தப்ப வைத்துள்ளது என ஆம்ஸ்ட்ராங் சகோதரர் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.
அவரது உடல், ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்பிக்க வைத்துவிட்டது என ஆம்ஸ்ட்ராங் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தமன் உள்பட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். 12 பேர் ஜாமீன் மனு கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அதன் மீதான விசாரணை நேற்று நடந்தது.
அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழக்கு கோப்புகளை மாநில காவல் துறை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் மனுதாரார்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழக காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என வாதிட்டார். மேலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என தெரிவித்தார்.
ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்பிக்க வைத்துவிட்டது என ஆம்ஸ்ட்ராங் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கார்த்திகேயன், 9 பேரின் ஜாமீன் மனு மீது நவம்பர் 10-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications