சென்னையில் பயங்கரம்! மனைவி கண் முன்னே சரமாரி தாக்குதல்.. அப்படியே சரிந்து விழுந்த ரவுடி ஓலை சரவணன்
சென்னை: திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே வசித்து வருபவர் ரவுடி ஓலை சரவணன் (35). பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் நேற்று மாலை தனது மனைவியுடன் வீட்டின் அருகே உள்ள காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தாக கூறப்படுகிறது.
ஹெல்மெட் அணிந்து வந்த அந்த மர்ம நபர்கள், ரவுடி ஓலை சரவணனை சரமாரியாக வெட்டி உள்ளனர். மனைவி கண் முன்னே நடந்த இந்த கொடூர சம்பவத்தில் ஓலை சரவணன் அங்கேயே சரிந்து விழுந்தார்.

ஓலை சரவணனை கொலை செய்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தனது கணவர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போன, ஓலை சரவணன் மனைவி இது குறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஓலை சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் இருந்து சிறை சென்று வெளியில் வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில், முன் பகை காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications