ஆட்டோ டிரைவரிடம் அதிமுகவின் டி ஜெயக்குமார் ‘டெபாசிட்' இழப்பு.. ராயபுரத்தில் தவெக வேட்பாளர் வெற்றி
சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாஜி சபாநாயகருமான டி ஜெயக்குமார் டெபாசிட் இழந்தார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கிய ஆட்டோ டிரைவர் விஜய் தாமு அமோக வெற்றி பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் சுபைர் கான் 2ம் இடம் பிடித்தார்.

இன்று காலையில் வாக்குகள் எண்ண தொடங்கியபோதே சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தொடங்கினர். அதன்படி சென்னை ராயபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் முன்னிலை வகிக்க தொடங்கினர்.
ராயபுரம் தொகுதியை எடுத்து கொண்டால் திமுகவில் சுபைர் கான், அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான டி ஜெயக்குமார் போட்டியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்டோ டிரைவரான விஜய் தாமு களமிறங்கினார். நாம் தமிழர் பாபு மயிலன் களமிறங்கினார்.
தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் விஜய் தாமு முன்னிலை வகிக்க தொடங்கினார். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பின்தங்கினர். குறிப்பாக அதிமுகவின் டி ஜெயக்குமார் முன்னிலை வகிக்கவே இல்லை. மொத்தம் 14 சுற்றுகளாக வாககுகள் எண்ணப்பட்டன.
இறுதியில் தவெக வேட்பாளர் விஜய் தாமு அமோக வெற்றி பெற்றார். விஜய் தாமு மொத்தம் 58,827 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார். அவரை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் சுபைர் கான் 44,698 வாக்குகள் வாங்கி 2ம் இடம் பிடித்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 14,129 ஆகும்.
இதில் அதிமுகவின் டி ஜெயக்குமார் மொத்தம் 18,285 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். அதோடு அவர் டெபாசிட் இழந்தார். இதனால் டி ஜெயக்குமார் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
ஏனென்றால் இந்த தொகுதியில் முதல் முறையாக டி ஜெயக்குமார் 1991ல் வெற்றி பெற்றார். பிறகு 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 4 முறை வென்றார். கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் இட்ரிம் ஆர் முர்த்தியிடம் தோல்வியடைந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தோல்வியடைந்துள்ளதோடு டெபாசிட்டையும் இழந்துள்ளார்.
மேலும் சென்னையை எடுத்து கொண்டால் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சென்னையில் துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிகளில் மட்டுமே திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
துறைமுகத்தில் அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெற்றி பெற்றனர். மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் தவெகவினர் முன்னிலை வகித்தனர். குறிப்பாக சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். அவரை தவெகவின் விஎஸ் பாபு வீழ்த்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications