வேகமாக தொடங்கிய பணிகள்.. சென்னைக்கு உள்ளேயே ராக்கெட் வேகத்தில் பறக்கும் RRTS ரயில்.. எங்கே?
சென்னை: சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரை சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.
RRTSயின் முக்கிய அம்சங்கள்
அதிவேக ரயில்: மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும்.
வசதிகள்: ஏசி கோச்சுகள், Wi-Fi, ஆட்டோமெட்டிக் கதவுகள்.
வேகமான பயணம்: மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது.
சுற்றுச்சூழல் : மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம்.
டெல்லி-NCR முதல் கட்டம்: டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது.

வேறு எங்கெல்லாம் வருகிறது?
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து RRTS ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை கண்டறிய விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஆறு ஏலதாரர்கள் முன் வந்துள்ளனர். இதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விடப்படும்.
தமிழக அரசின் கடந்த பட்ஜெட் அறிவிப்பின்படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே ரயில் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.
🔹சென்னை - திண்டிவனம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹கோயம்புத்தூர் - சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
RRTS (Regional Rapid Transit System) என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். RRTS என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.
ரூட் என்ன?
1. சென்னை-செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் வழித்தடம் (167 கி.மீ)
இந்த வழித்தடம் சென்னையை விழுப்புரத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் வழியாக செல்கிறது:
சென்னை - தொடக்கப் புள்ளி, சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூரிலிருந்து இருக்கலாம்.
தாம்பரம்
செங்கல்பட்டு
திண்டிவனம்
விழுப்புரம் கடைசி ஸ்டேஷன் அமைக்கப்படும்
இந்த வழித்தடம் தெற்கு சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து பயணிகளுக்கு RRTS சேவை வழங்குவதாகியும் தெற்கு மாவட்டங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் வழித்தடம் (140 கி.மீ)
இந்த வழித்தடம் சென்னையை வேலூருடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, பின்வரும் வழியாகச் செல்கிறது:
சென்னை: தொடக்கப் புள்ளி.
பூந்தமல்லி
ஸ்ரீபெரும்புதூர்
சுங்குவார்சத்திரம்
பரந்தூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
ராணிப்பேட்டை
வேலூர் கடைசி ஸ்டேஷன்
இன்னொரு பக்கம் மெட்ரோ
52.94-கிமீ பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ நீட்டிப்புக்கான அனுமதியை CMRLக்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. 52.94 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும். இது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் திறக்கப்பட உள்ளது.
பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன.
ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.
அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்த நிலையில் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications