வங்கி கணக்கிற்கே வரும் ரூ. 1.25 லட்சம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?
சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவருக்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும். மொத்தமாகும் ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.

திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும் இருக்க வேண்டும். குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதிகள்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கும் திட்டத்திற்கு தகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18-60 வரை
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
சாதி, வருமானம் குடும்ப அட்டை ஆதார் அட்டை பிறப்பிடச் சான்றிதழ். ஓட்டுநர் உரிமம்,
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்,
டாப்செட்கோவின் இணையத்தளமான www.tabcedco.tn.gov.in. ல் பதிவு செய்யலாம்.
பெண்கள்:
தமிழ்நாட்டில் இப்படி பெண்களுக்கு என்று பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. உதாரணமாக பெண்களுக்கு ரூ 50,000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பெற தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அடுத்தகட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டத்திற்கு இடையே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விண்ணப்பங்கள்:
இந்த திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சுயத்தொழில் செய்ய ரூ. 50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்காக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 2 பெண்கள் குழந்தைகள் திட்டத்திற்கான ஆவணங்கள் சரி பார்ப்பு பணிகள் நடக்க உள்ளன.
திட்டம் 1: அதன்படி முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து நிதியுதவி நிவாரண பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளநிலை மேற்கொள்ள பொறியியல் ஊக்குவிக்க பணம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் பட்டப்படிப்புகளை தொடர்ந்து பயில்வதற்கும் ஏதுவாகவும் அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-24- கல்வியாண்டில் 24 மாணாக்கர்களுக்கு நிதி உதவித் தொகையான ரூ.50,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்கும் பயிலும் அனைத்து கல்விக் கட்டணத்தை 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அரசால் தள்ளுபடி செய்து அரசு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது.












Click it and Unblock the Notifications