செம.. வேளாண், தோட்டக் கலை பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க உள்ளோம். அதன்படி வேளாண், தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவை - வேளாண்மை பட்ஜெட் - 2022 - 23
தமிழகத்துக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க உள்ளோம். அதன்படி வேளாண், தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியதுதவி வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications