ரூ.1000 வரது இருக்கட்டும்.. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கே அடுத்தடுத்து சிக்கல்! கைக்கு எட்டுமா?
சென்னை: ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு 2 வது மாதமாக பெண்களுக்கு பணம் கணக்கில் செலுத்தப்படும் நிலையில், அடுத்தடுத்து சிக்கல்களை இந்த திட்டம் சந்தித்து வருகிறது. அவை என்ன? விரிவாக பார்ப்போம்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைபோல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த அரசு, தகுதியான பெண்கள் யார்? தகுதியற்றவர்கள் யார்? என பட்டியலை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு விண்ணப்பிப்பதற்காக 3 கட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. 1.63 கோடி விண்ணப்பங்கள் அதன் மூலம் அரசுக்கு வந்தன.

உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த ஒரு கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் உள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்ப நிலை குறித்த எஸ்.எம்.எஸ் விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எஸ்.எம்.எஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என் அரசு அறிவித்தது. அதேபோல் இந்த மாதமும் மேல்முறையீடு செய்யலாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். இந்த மாதத்திற்காக வரவு இன்று வங்கிக் கணக்கில் வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மகளிர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் முதலாவது பிரச்சனை, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்உச்சநீதிமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ரிட் மனுவை தாக்கல் செய்து இருக்கிறார். அதில், "ஏற்கனவே தமிழ்நாடு அரசு ரூ.7.54 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் ரூ.7,000 கோடி செலவீட்டில் வறுமை கோட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதாரதம் பாதிக்கப்படும். இதனால் மாநிலம் மேலும் கடனில் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பல மாவட்டங்களை சேர்ந்த ரூ.1000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியான மகளிர் இந்த திட்டத்தில் பயன் அடையவே இல்லை. பல்வேறு வகையான முறைகேடுகள் இதில் நடைபெற்று இருக்கின்றன. உண்மையான பயனாளிகள் இந்த உரிமைத் தொகை திட்டத்திற்காக தேர்வு செய்யப்படாமல் உள்ளார்கள். இந்த திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்." என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
2 வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அறிவித்து உள்ளார். பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கக்கோரி வரும் அக்டோபர் 18 ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே 60 சதவீத பெண்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என அண்ணாமலை கூறி இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்து உள்ளது. உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா? அல்லது அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க அறிவுறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
-
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications