"1000 ரூபாய்".. பெண்கள் கையிலேயே பணத்தை தரப்போகுதாம் தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்.. அசத்தல் திமுக
சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கு, நிபந்தனைகள் உண்டு என்று தெரிவிக்கபட்டுள்ளதால் பெண்கள் இதனால் சந்தேகமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..
சூப்பர் அறிவிப்பு: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் அறிவித்திருந்தார்.. அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பியது..
வானதி கேள்வி: அதுபோலவே, அமமுகவும் கேள்வியை கேட்டது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார் டிடிவி தினகரன்.. "எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கேட்டிருந்தார்" பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.
யார் யாருக்கு கிடைக்கும்: இப்படி பல குழப்பங்கள் நிலவிவரும் நிலையில்தான், தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் யார், யாருக்கு கிடைக்கும் என்று தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்..
அதில், "ஏற்கெனவே, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடைய மாட்டார்கள். வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. ஆனால், கண்டிப்பாக ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயமாக ரூ.1000 உரிமைத் தொகையைப் பெறுவார்கள்" என்றார் கீதா ஜீவன்.
இதற்கு நடுவில், இந்த 1000 ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல்கள், இணையத்தில் பலவாறாக வட்டமடிக்க ஆரம்பித்தன.. குறிப்பாக, வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்கிறார்கள்.. ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் தகவல்கள் கசிந்தன.

PHAAY: பிறகு, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்றார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகின..
புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்றும் மற்றொரு தகவல் கசிந்தன.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சொல்லப்படுகிறது.. இப்படி பல்வேறு தகவல்கள் வட்டமடித்து வரும்நிலையில், இதுவரை அரசிடமிருந்து திட்டம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை.
இதற்கு நடுவில் இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. இந்த உரிமைத்தொகையை அரசு எதன்மூலம், எப்படி தரப்போகிறது? நேரடியாகவே வங்கிக்கணக்கு உரிமைத்தொகை சென்றுவிடுமா? என்றெல்லாம் சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.
1 கோடி மகளிர்: தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.. இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன..
குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர்... அந்த கடனை தவணை வாரியாகவும் செலுத்தி வருகிறார்கள்.. உரிமை தொகையை, அந்த வங்கி கணக்கில் செலுத்தினால், கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.. பல வங்கிகள், குறைந்தபட்ச இருப்பை (மினிமம் பேலன்ஸ்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள்.
வங்கிக்கணக்கு: அப்படி இருக்கும்போது இந்த உரிமைத்தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால், அரசின் திட்டம் மக்களை சென்றடையாது.. பிரபலமும் அடையாது.. இதுவே பெண்களின் கைகளில், அந்த உரிமைத்தொகையை கொடுத்தால், திமுகவுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்றும் அந்த கட்சியினர் வலுவாக நம்புகிறார்கள்.-
அதனால்தான், மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம்.. அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமைத்தொகை செலுத்தப்படும்...அதன் ஊழியர்கள், "மைக்ரோ ஏடிஎம் "எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மாதம்தோறும் செல்வார்கள்.
எதிர்பார்ப்பு: அந்த கருவியில் பயனாளிகளின், ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட விபரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது, டெபிட் கார்டு பயன்படுத்தி உரிமைத்தொகை பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்களாம்.. இதற்கான அறிவிப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications