சென்னை ஏர்போர்ட்டில்... ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை-பவுடர் பறிமுதல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுமார் 25 கிலோ எடை கொண்ட ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை-பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Recommended Video

இதனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதேபோல் விமானத்தின் கழிவறையில் இருந்த ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

தீவிர சோதனை
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கா இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வலி நிவாரணி
அங்கு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 4 மரப்பெடிகள் கொண்ட பார்சல்கள் இருந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.அந்த பெட்டிகளின் மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டு இருந்தது.
|
25 கிலோ போதை மாத்திரை-பவுடர்
அந்த பெட்டிகளை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் உள்ளே சுமார் 25 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ.2.45 கோடி ஆகும். இதனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கமும் பறிமுதல்
அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications