Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசலில் விழுந்த ரூபாய் "நோட்டு".. வெட்ட வெளிச்சமான வீடியோ.. யாரந்த நபர்.. இதென்ன இப்படி கிளம்பிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீரென ஏடிஎம் வழியே கள்ளநோட்டுக்களை டெபாசிட் செய்த டைல்ஸ் கடைக்காரர் மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.. இன்று முதல் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.. இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

rs 2000: 2 thousand rupees issue and fake note deposit through atm near madruai, one arrested

முதியவர்கள் : இதனைத் தொடர்ந்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது..

அதாவது, ஒரே நேரத்தில் ஒருவர் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.. நாளைய தினம், முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்படவிருக்கிறது.. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? கஸ்டமர்களுக்கு எப்படி வசதி செய்து தரவேண்டும்? என்றெல்லாம் ஆலோசிக்கப்படுகிறது.

rs 2000: 2 thousand rupees issue and fake note deposit through atm near madruai, one arrested

கூட்டம் அதிகம்: ஆனால், முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள்... காரணம், 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் புழங்கவும் வாய்ப்பில்லை. எனினும், வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் கஸ்டமர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.. முன்னதாக, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இன்றைய தினம், முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்படவுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. போடி அருகே உள்ளது கிருஷ்ணா நகர் என்ற பகுதி.. இங்கு தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த வங்கியின் வாசலிலேயே ஏடிஎம் இயந்திரமும் உள்ளது... அதில் பணத்தைச் செலுத்தவும், பணம் எடுக்கவும் தனித்தனியே இயந்திரங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.

rs 2000: 2 thousand rupees issue and fake note deposit through atm near madruai, one arrested

கள்ள நோட்டுக்கள்: சம்பவத்தன்று சாயங்காலம், வங்கித்தரப்பினர் ஏடிஎம் மிஷினில் இருந்து பணத்தை எடுக்க ஊழியர்கள் வந்துள்ளனர்.. அப்போதுதான், 500 ரூபாய் தாள்களில் 8 கள்ளநோட்டுகள் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. அதில் 4000 ரூபாய் கள்ள நோட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது...

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் நோடல் அலுவலர், உடனடியாக இதை பற்றி போடி தாலுகா போலீசுக்கு புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வங்கியின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்... அதில் வங்கியில் கள்ளநோட்டுகளை ஏடிஎம் வழியே டெபாசிட் செய்தது, கோகுல் என்பவர் என்பது தெரியவந்தது.. தேவாரம் மெயின் ரோட்டில், டைல்ஸ் கடை வைத்து நடத்திவருகிறாராம் இந்த கோகுல்..

கைது நடவடிக்கை: இதனைத் தொடர்ந்து போலீஸார் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. கோகுலுக்கு எப்படி கள்ள நோட்டுகள் கிடைத்தன? கள்ளநோட்டு கும்பலோடு அவருக்கு நேரடி தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கே தெரியாமல் தான் டெபாசிட் செய்தாரா? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது.

யார் கோகுல்: முன்னதாக, கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என்று உறுதி செய்யப்பட்டன..

அதற்கு பிறகுதான், டைல்ஸ் கடை கோகுல் சிக்கி உள்ளார்.. ஆனால், போலீசார் வங்கிக்கு விரைந்தபோதே, தன்னை எப்படியும் தேடி வருவார்கள் என்பதை அறிந்து, கோகுல் தலைமறைவானார்... அவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர்.. இப்போது வங்கி ஏடிஎம்மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதே மாவட்டத்தில் தொடர்ந்து கள்ள பணம் புழங்குவது மேலும் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+