ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய்.. "டோக்கன்கள்" ரெடி.. என்ன ஸ்பெஷல் தெரியுமா.. குவியும் பாராட்டு
ரேஷனில் ரூ.2 ஆயிரம் உதவி தொகைக்கான டோக்கன்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்கள் தயார் நிலையில் உள்ளன.. இந்த டோக்கன்களில் இடம்பெற்றுள்ள ஸ்பெஷல் அம்சம்தான், மக்களை ஈர்த்து வருகிறது.
இந்த 2 வருடமாகவே கொரோனா தொற்று பீடித்து வரும் நிலையில், தமிழக மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளனர்..
தற்போது முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மே மாதம்
அதன்படி, முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த மே மாதமே வழங்கப்பட்டுவிட்டது.. 2-ம் தவணையாக இந்த மாதம் 2000 ரூபாய் வழங்கவும்,14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.. இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜுன் 3தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

அறிவிப்பு
2000 ரூபாய், மளிகைப் பொருள் தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் அதாவது ஜுன் 11 முதல் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது... இந்த டோக்கன்களின் அடிப்படையில் 2000 ரூபாயும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் ஜுன் 15ம் தேதி முதலே காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருந்தது.

டோக்கன்கள்
மேலும், அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 2-ம் தவணை தொகை 2000 ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் வழங்கப்படவுள்ளதால், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் ரேஷன் கடையில் சிரமமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள டோக்கன்கள் தயார்நிலையில் இருக்கின்றன..

தமிழ்நாடு அரசு
இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், இந்த டோக்கன்களில் "தமிழ்நாடு அரசு" என்று அச்சிடப்பட்டுள்ளது.. முன்பெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள், அல்லது ஆளும் கட்சி சார்ந்தோரின் போட்டோக்கள் இருக்கும்.. அல்லது கட்சி சார்ந்த குறியீடுகளும் இருக்கும்.. இவையெல்லாம் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது... தமிழ்நாடு அரசு என்ற பெயரில் டோக்கன்கள் ரெடியாகி கொண்டிருக்கின்றன.. இதற்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்..!
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications