ஸ்டாலினுக்கு ஒரே சிரிப்புதான்.. "தித்திப்பு" அறிவிப்பை சொன்ன அமைச்சர்.. கரவொலியால் அதிர்ந்த சபை
வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையை உழவர் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.. அப்போது, நல்லா கை தட்டி பாராட்டலாமே என்று உறுப்பினர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொள்ளவும், உறுப்பினர்களும் கைகளை தட்டி, அமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர்.. இந்த நிகழ்வுகளையெல்லாம் அவையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் புன்னகைத்தபடியே பார்த்து கொண்டிருந்தார்.
முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இப்படி ஒரு அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானதுமே, விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது..
காரணம், அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ககூட நாட்டில் பெரும்பான்மையான மாநில அரசுகள் தயாராக இல்லை.. அந்த வகையில் பிரத்யேகமாக பட்ஜெட் தாக்கல் என்றதுமே, கிட்டத்தட்ட தங்களின் குறைகள் தீர்ந்ததுபோலவே ஒரு நம்பிக்கை விவசாயிகளுக்குள் பிறந்தது.

விளைச்சல்
அன்றைய சூழலில் போதிய நிதி இல்லாமல் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.. இதைதவிர, மழை வெள்ளம், வறட்சி என இயற்கை சீற்றம் தன் பங்குக்கு துயரை அவ்வப்போது தந்துவிட்டு போகிறது.. இதனால், விளைச்சல் பாதிக்கிறது.. இதனால் வருமானமும் பாதிக்கிறது... இந்நிலையில், இந்த தனி வேளாண் பட்ஜெட் எந்த மாதிரியாக இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.. குறிப்பாக கரும்பு விவசாயிகள் பிரச்சனைதான் பலருக்கும் கவனத்துக்கு வந்தது..

விவசாயிகள்
ஏனெனில், கரும்பு விவசாயிகளை பொறுத்தவரையில், 2 விதமான பிரச்சனைகள் உள்ளன... சாகுபடி செய்யும் கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலைகள் சீக்கிரமாக வழங்கினால்தான் அவர்களால் அடுத்தகட்ட சாகுபடியில் ஈடுபட முடியும்... கரும்புகளை விவசாயிகளிடமிருந்து பெறும் சர்க்கரை ஆலைகள், அடுத்த 14 நாட்களுக்குள் அதற்கான தொகையை வழங்க வேண்டும்...

சந்தை விலை
ஆனால், அப்படி வழங்காமல் அது நிலுவை தொகையானால் ஆண்டுக்கு 15 சதவிகித வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்தும், சர்க்கரை ஆலைகள் மெத்தனமாகவே இருக்கின்றன... சந்தையில் சர்க்கரை விலை குறைந்து போதிய நிதி இல்லாததால்தான் விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க முடியவில்லை என்று சர்க்கரை ஆலைகள் காரணம் சொல்லகின்றன..

நிலுவை தொகை
அதாவது, 2020 பிப்ரவரி மாதம் வரையில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை ஆலைகள் மொத்தம் ரூ.87,000 கோடி பாக்கி வைத்துள்ளன... இதைதவிர, 2017-18 பருவத்துக்கான பாக்கி தொகை ரூ.85,000 கோடியும் நிலுவையில் உள்ளது.. இதில், அரசு தரப்பிலிருந்து இதுவரையில் ரூ.1,574 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது... ஆனாலும் பாக்கி தொகை இன்னமும் நிலுவையிலேயே உள்ளன.. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கான பாக்கி தொகையை வழங்காமல் தாமதித்தும் வருகின்றன.. நிலுவை தொகை ரூபாய் 1500 கோடியை உடனே வழங்க கரும்பு விவசாயிகள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கையும் அவ்வப்போது வைக்கப்பட்டு வருகின்றன.

பட்ஜெட்
எனவே, இதற்கெல்லாம் ஏதாவது தீர்வு இன்று கிடைக்கும் அல்லது தீர்வுக்கான சாத்தியக்கூறுகளுக்கு இன்றைய வேளாண் பட்ஜெட் வழிவகுக்கப்படும் என்றுதான் கணிக்கப்பட்டது.. அதேபோல, கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்து அம்சங்கள் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன...

அறிவிப்பு
இந்நிலையில், இன்றைய பட்ஜெட்டில், பனை, கரும்பு, தோட்டக்கலை, சிறு குறு விவசாயிகளுக்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். அதேசமயம், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஒதுக்கீடு
கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அரவை பருவத்தில் 1 டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.150 வழங்கப்படும், இதனால் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயரும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

கரவொலி
1 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.150 ஊக்கத் தொகை அறிவித்ததுமே, கையை நல்லா தட்டலாமே என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.. இதையடுத்து, அவையில் கரவொலி எழுந்தது.. பிறகு தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்த திட்டத்துக்காக ரூ. 138 கோடியே 83 லட்சம் நிதியினை ஒதுக்கியுள்ளது... 2750 கொடுத்தது தற்போது 2900 ஆக உயர்ந்துவிட்டது" என்றார்..

அறிவிப்பு
இப்படி சொல்லி முடித்ததுமே மறுபடியும் சபையை நோக்கி, இதுக்கும் நல்லா கை தட்டி பாராட்டலாமே,கரும்பு விவசாயிகள் பயன்பெறும் அறிவிப்பை நல்லா பாராட்டலாமே என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.. உடனே அவையில் இருந்தோர் அனைவரும் பலத்த கைதட்டல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. அமைச்சர் இப்படி கைதட்ட சொன்னதையும், அவையினர் அதற்கு மதிப்பளித்ததையும் பார்த்து முதல்வர் ஸ்டாலின் சிரித்தார்.. அனைத்து நிகழ்வையும் புன்முறுவலுடன் பார்த்து கொண்டே இருந்தார் முதல்வர் ஸ்டாலின்..!
-
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!












Click it and Unblock the Notifications