எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்திற்கு அபராதம் விதித்த ஐகோர்ட்.. பள்ளிகல்வித்துறைக்கு செலுத்த உத்தரவு
சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில், எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ஓராண்டு மற்றும் ஈராண்டு முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிடமோ எந்தவித அனுமதியும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முறைப்படி பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பு சட்ட விரோதம் என்பதால், அதனை செல்லாது என உத்தரவிட கோரிக்கை விடுத்திருந்தார்.
சீனாவசனின் வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஏற்கனவே இதை போன்ற பல வழக்குகளை விசாரித்துள்ள நீதிமன்றம், தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த உரிய அனுமதி பெற அறிவுறுத்தியுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியே தற்போது தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது.
இதை அனுமதித்தால் மக்களை தவறாக வழி நடத்துவதை போன்று அமைந்து விடும். எனவே மனுதாரர் சீனிவாசனின கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்காக, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை தொடர்ந்து நடத்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.
அபராதமாக விதிக்கப்பட்டுள்ள ரூ.5 லட்சத்தை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில், பள்ளிக் கல்வித்துறையிடம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications