வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வீட்டு ஓனர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
சென்னை: வாடகை விதிமுறைகள் புதிய சட்டம் 2025-ன் படி பல்வேறு விதிமுறைகள் மாறி உள்ளது. ஒரு வீட்டின் உரிமையாளர் 2 மாத வாடகைக்கு மேல் முன்பணம் வசூலிக்கக்கூடாது. வாடகை ஒப்பந்தத்தை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்தே ஆக வேண்டும். இந்த புதிய சட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்பட பெருநகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவது என்பதே சவாலானது. நல்ல வீடு வாடகைக்கு கிடைப்பதும் பெரிய சவாலாக மாறி உள்ளது. பெருநகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்கள், கிராமங்களில் கூட வாடகை வீடு கிடைப்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. சர்வ சாதாரணமாக வாடகை 5000 என்கிற அளவில் பல ஊர்களில் இருக்கிறது. ஆனால் வாடகை வீடுகளை பொறுத்தவரை இருதரப்புக்குமே நீண்ட காலமாக தீர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. என்ன தான் சட்டங்கள் இருந்தாலும், அது போதிய பாதுகாப்பை இருதரப்புக்குமே வழங்கவில்லை..

இதையடுத்து வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வரப்போகிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனி வீட்டின் உரிமையாளர் 2 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக கேட்க வேண்டும். எனவே வீட்டிற்கு குடியேறுவோர் 2 மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதுமானது. அதேபோல் வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
முக்கிய அம்சங்கள் விவரம்:
* வீட்டை வாடகைக்குவிட்டால், அந்த ஒப்பந்தந்தை வீட்டின் உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் பெயருக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு பதிவு செய்யாமல் இனிமேல் விட முடியாது. ஏனெனில் புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* வீட்டின் உரிமையாளர், வாடகைக்கு குடியேறுவோர் இருவரும் ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.
* வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. அதேநேரம் வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.
* ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம் வாடகைதாரர்களுக்கு கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.
* வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம். இதனை வீட்டின் உரிமையாளர் எதிர்க்க முடியாது.
* வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.
* வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காகவே வீட்டை காலி செய்ய வைக்க முடியும். இந்த காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.
* வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருககிறது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.
வீட்டு வாடகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். அதேநேரம் சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாடகை ஒப்பந்தம் பதிவு செய்வது எப்படி?
வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து பத்திரத்தில் ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதில் இடம் பெற வேண்டும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியவையும் இடம் பெறும். சட்டப்பூர்வமான பதிவு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது ஒருபுறம் எனில், இருவருக்குமே சிக்கல் ஏற்படலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications