உங்களை தேடி வரும் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை! தமிழ்நாடு அரசின் செம அறிவிப்பு! பாலை வார்த்துட்டாங்களே
சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான தகுதியுடைய பெண்களிடமிருந்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் படி 2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை பெற பின்வரும் விஷயங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.
தாயின் வயது மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் மிகாமல் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று அதற்கென வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்/ ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது குழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்றுகளை இணைக்க வேண்டும்.
தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது அரசுமருத்துவரிடமிருந்து பெற்ற சான்று) இருப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்
மருத்துவரிடமிருந்து குடும்ப கட்டுப்பாடு மேற்கொண்டதற்கான சான்றிதழ் (தாய் அல்லது தந்தை) ஒருவேளை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைக்கு ரூபாய்.50000/-க்கான வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.
குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தபின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications