ஜெயலலிதா பிறந்த நாள்.. விவசாயிகளுக்கான ரூ 6000 திட்டத்தை தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ. 6000 நிதியுதவியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 அளிக்கும் திட்டம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.
மொத்தம் மூன்று தவணைகளாக வழங்கு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க தமிழகம் வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகளுக்கான திட்டத்தை பியூஷ் கோயலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தொடங்கி வைத்தனர்.அப்போது பேசிய பியூஷ் கோயல், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததாக கூறினார். இதற்காக ஆண்டிற்கு 75 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகளை போன்று மீனவர்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திட்டத்தின் தொடக்க விழாவை பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைத்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications