பெண்களுக்கான ரூ 6000 உதவித்தொகை! மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: கருவுற்ற பெண்களுக்கு ரூ 6000 மத்திய அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற ஆதார் கார்டு கட்டாயமில்லை என சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ 6 ஆயிரத்தை பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணை திட்டம்தான் இந்த வந்தனா யோஜனா திட்டம். கர்ப்பிணிகளுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு வகையான நோய்களையும் தடுக்க நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு கர்ப்பிணிகளுக்கு குறைந்தபட்சம் 19 வயது இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஆப்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். அதாவது நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 தவணைகளில் பணம் கிடைக்கும்.
முதல் தவணை ரூ 1000, இரண்டாவது தவணை ரூ 2000, மூன்றாவது தவணை ரூ 3000 என பணம் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக கர்ப்பிணிப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த திட்டம் பற்றி கூடுதல் தகவல்களை அறிய வேண்டுமானால் https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் பெண்கள் ஏதாவது பிரச்சினையை எதிர்கொண்டால் 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயனாளியின் ஆண்டு வருமானமானது 8 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். உங்களிடம் பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால், இந்தத் திட்டத்தின் தகுதியான பலன்களைப் பெறலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ 500, ரூ 1000 பண மதிப்பிழப்பு செய்த நிலையில் அடுத்த ஆண்டே 2017இல் ஜனவரி 1 ஆம் தேதி இந்த ரூ 6000 திட்டத்தை அறிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications