அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு நேரில் விரைந்த ஆர்.எஸ்.பாரதி.. தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சென்றனர். அமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரபப்பு நிலவுகிறது.
சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில், வருமான வரித்துறையாக இருந்தாலும், அமலாக்கத்துறையாக இருந்தாலும், எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சற்று முன்பு திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் திடீரென பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு வெளியே இருந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் உள்ளிட்ட திமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications