Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.எஸ்.பாரதி வீசிய "விதை"யில் வெடித்த "இலை".. எடப்பாடி பழனிசாமி பாஸ் செய்த ரகசிய மெசேஜ்.. பாஜக கிலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டாலும், இதற்கு பின்னால், ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நடந்துள்ளதாம்.. என்ன நடந்தது?

அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... இரு தரப்பிலுமே இதை பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.. இரு தரப்பிலுமே யாரையுமே விமர்சிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. ஆனாலும், தமிழக பாஜக சீனியர்களும், மேலிட பாஜகவும் அமைதி காத்து வருகிறது.

RS Bharathi and Why did Edapadi Palanisamy take this Sudden decision about ADMK BJP Alliance

ரெடியான எடப்பாடி: அதிமுக திடீரென இந்த கூட்டணி முடிவை அறிவித்துவிடவில்லை. இதற்காக கடந்த ஒரு வார காலமாகவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகி வந்ததாக சொல்கிறார்கள்.

இதற்கு காரணம், டெல்லியின் அதிகாரத்தை வளர்க்கக்கூடாது.. துரோகிகளையும் வளரவிடக் கூடாது என்ற முடிவுக்கு எடப்பாடி வந்துவிட்டாராம். அதனால்தான் தன்னுடைய இந்த முடிவை முக்கிய தலைவர்களிடம் விவாதித்திருக்கிறார். இந்த முடிவை அடிப்படையாக வைத்து, மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. அப்போது பெரும்பாலானோர் சொன்ன ஒரே கருத்து, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதுதானாம்.

அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு, திமுகவின் ஊழல் லிஸ்ட்டை வெளியிட்டிருந்ததுடன், அதிமுகவின் ஊழலையும் வெளியே கொண்டுவருவோம் என்று கூறியிருந்தார்.. கூட்டணியில் உள்ள அதிமுகவை சொன்னதுமே, பலருக்கும் இது அதிர்ச்சியை தந்தது.. அதேசமயம், அதிமுக இதற்கு எந்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் அண்ணாமலைக்கு அப்போது தெரிவிக்கவில்லை. இதை அதிமுக தொண்டர்களும் கவனித்துள்ளனர்.

அதேபோல, மறைந்த முதல் ஜெயலலிதாவை, ஊழல் செய்தவர் என்று அண்ணாமலை விமர்சித்தபோதும், அதிமுக தொண்டர்கள்தான் கொந்தளித்தார்களே தவிர, அதிமுக தலைவர்கள் பெரிதாக அண்ணாமலையை கண்டிக்கவில்லை..

மதுரை மாநாடு: மதுரை மாநாட்டுக்கு ஆட்கள் பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டதாக கிண்டலடித்ததையும் அதிமுக கண்டுகொள்ளவில்லை. இதற்கு பிறகு, அறிஞர் அண்ணாதுரையை விமர்சித்தபோதும்கூட, அதிமுக பெரிதாக அண்ணாமலையை கண்டிக்கவில்லை..

ஆர்எஸ் பாரதி: திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி, பதிலடி தந்தார்.. "அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால், அண்ணாமலை ஆடுதான் மேய்த்திருப்பார்" என்று ஆர்எஸ் பாரதி கடுமையான விமர்சிக்கவும், அதற்கு பிறகுதான், அதிமுக ஆவேசமானது. வெளிப்படையாகவே அண்ணாமலையை விமர்சிக்க துவங்கியது.

இப்படி அதிமுக தரப்பிலிருந்த குறைகளை, லிஸ்ட் போட்டு அதிமுக மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்களிடம் சுட்டிக்காட்டி, பாஜகவுடன் கூட்டணியே நமக்கு வேண்டாம் என்று சொன்னார்களாம்.. அதற்கு பிறகுதான், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி, அதன்படியே கூட்டணி முடிவையும் அறிவித்தாராம்.

அண்ணாமலை: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்பதை எல்லாம், கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று அண்ணாமலை சொன்னதையும் அதிமுக தலைமை கவனிக்காமல் இல்லை.. அடுத்ததாக தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை சொன்னதையும் அதிமுக தலைமை கவனிக்காமல் இல்லை.

இன்றைய தினம் அண்ணாமலை டெல்லியில் தலைவர்கள் சந்திப்பார் என தெரிகிறது. அப்போது, கூட்டணி முறிவு குறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை மீதான கனத்த நம்பிக்கை டெல்லிக்கு இருந்தாலும், கூட்டணி விஷயத்தில் அதிமுகவை இழக்க தயாரில்லை என்கிறார்கள். அதனால் எப்படியும், எடப்பாடியிடம் சமாதானம் பேசப்படலாம் என்றும் முணுமுணுப்புகள் கிளம்பி உள்ளன.

அதிமுக பாஜக : ஆனால், இத்தனை விமர்சனங்களையும் அதிமுக மீது வீசிவிட்டு, இனிமேல் எப்படி கூட்டணி என்று பாஜக வருவார்கள்? என்பதே அதிமுக நிர்வாகிகளின் கேள்வியாக உள்ளது. அதேசமயம், அதிமுகவின் முடிவு குறித்து நிறைய தலைவர்கள் பெரிதாக கருத்து கூறவில்லை. காரணம், அதிமுகவின் நிலைப்பாடு எப்போது வேண்டுமானாலும் மாறலாம், அல்லது தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் உறவுக்கரம் நீட்டலாம் என்ற ஐயம் நிலவி வருகிறது.

எனினும், தாங்கள் எடுத்த முடிவிலிருந்து அதிமுக பின்வாங்க போவதில்லையாம். அப்படி பின்வாங்கிவிட்டால், மக்களின் நம்பிக்கையை கட்சி இழக்க நேர்ந்துவிடும், அதிருப்திகள் கூடிவிடும் என்பதையும் உணர்ந்தே உள்ளார்களாம்..

பாஜகவை மறுபடியும் உள்ளே அழைத்து வந்தால், கூட்டணிக்கு யார் தலைமை என்பது முதல், அதிமுகவின் பலம்வாய்ந்த தொகுதிகளையும் பாஜகவிடம் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தே வைத்துள்ளனராம்.

சிறுபான்மையினர்: அத்துடன் சிறுபான்மையினர் ஓட்டுக்களை இப்போது விட்டால், எப்போதுமே கைப்பற்ற முடியாது என்பதால்தான், இந்த கூட்டணி விஷயத்தில் கறாராக உள்ளதாம் அதிமுக மேலிடம். அதிமுகவின் பிளான் இப்படியெல்லாம் இருந்தாலும்கூட, ஹெட் ஆபீஸ் என்ன செய்ய போகிறது என்பதுதான் முக்கியமான சமாச்சாரமே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+