"புத்தி இருந்தா.." சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க முதல்வர் விஜய்க்கு சவால் விட்ட ஆர்.எஸ்.பாரதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் பேசிய நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியதும், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

RS Bharathi

அப்போது பேசிய முதல்வர் விஜய், "சர்க்காரியா கமிஷன், அதில், 1970-ல் திமுக ஆட்சியில இருந்தபோது, சத்யநாராயணா பிரதர்ஸ் என்ற ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்குக் குழாய் அமைக்க டெண்டர் கொடுத்த விவகாரத்தில், டெண்டர் வேண்டும் என்றால் 2.5% கமிஷன் வேணும்னு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக குறிப்பிட்டு இருக்கு, டெண்டர் தொகை 16 கோடி, அதில் 2.5% என்றால் ரூ.40 லட்சம் கமிஷனாம். இதே அவையில இந்த விவகாரத்தைப் பத்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்காங்க.. அப்போதான் சத்யநாராயணா பேரும், அவரோட மருமகன் புருஷோத்தமனோட பேரும் அடிபட்டுச்சு.

50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை, 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில பேசிருக்காங்கன்னு தோண்டி எடுத்தோம். அப்போதுதான் எல்லா கூத்தும் வெளிய வர ஆரம்பிச்சது. சர்க்காரியா கமிஷன் அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்துருக்கு. பவளவிழா கண்ட கட்சியோட பொன்விழா கண்ட சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன். இதுல, புருஷோத்தமன் சொன்னதுபோல ரூ.29 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கு.. அதுமட்டும் இல்லாம முரசசொலி கட்டடம் கட்ட பணமாகவும் பொருளகவும் கொடுத்துள்ளனர். சர்க்காரியா கமிஷனில் டெண்டர் தர முன்னாள் முதல்வர் கருணாநிதி அதிகாரத்தை தவறா பயன்படுத்தி இருக்காருனு குறிப்பிட்டு இருக்கு.

மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் க்ளீன்னு சொல்றாங்களே... சர்க்காரியா கமிஷன்லேயே சொல்லியிருக்கிற மாதிரி, அப்பவே அப்படின்னா இப்போ என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப் பாருங்க.. திமுகவுக்கு ஒரு பழக்கம் இருக்கு. ஆதாரத்தை பக்கத்துலயே வச்சுக்கிட்டு ஆதாரம் கேட்பாங்க.. பார்ட்டி ஃபண்ட்க்கு ஆதாரம் பக்கத்துலயேதான் இருக்கு. தலைமைச் செயலகத்தில் இருக்க நூலகத்தில் பாருங்கள்." எனப் பேசினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தேடினேன் தேடினேன் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆகவே பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவோம் என எழுதிக் கொடுத்ததைப் போல, இன்றைய முதலமைச்சர் பிறப்பதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட ஒரு புகாரை எடுத்துக்கொண்டு வந்து இன்று சட்டசபையில் பேசியுள்ளார்.

இந்த தவெக ஆட்சியில் நடந்துள்ள குற்றங்கள், கொலைகள் பற்றி முதலமைச்சரைப் பார்த்து குற்றம்சாட்டினார். மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார்கள். இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல துணிச்சலோ, யோக்கியதையோ இல்லாமல் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியுள்ளார்.

அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தமானது என சர்க்காரியா கமிஷனுக்கு முன்னதாக புகாரில் குறிப்பிடப்பட்டது. அந்த அண்ணா தியேட்டர் யாருக்கு சொந்தமானது என்பதை காவல்துறையை கையில் வைத்திருக்கும் விஜய் கண்டுபிடிக்க வேண்டும்.

சென்னை அமைந்தகரையில் உள்ள அருண் ஹோட்டல் கருணாநிதிக்கு சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அருண் ஹோட்டல் யாருக்கு சொந்தமானது என முதல்வர் விஜய் சொல்ல வேண்டும். சர்க்காரியா கமிஷன் எமர்ஜென்சி காலகட்டத்தில் அமைக்கப்பட்டது, எதற்காக அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசியல் விவரம் அற்ற திடீரென முளைத்த காளான்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. உண்மையிலேயே விஜய் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருந்தால், அவருக்கு துணிச்சல் இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க தயாரா? சர்க்காரியா கமிஷனுக்கு பிறகு எம்ஜிஆர் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தார். நாங்கள் தவறு செய்தது உண்மை என்றால் அவர் வழக்கு போட்டிருக்கலாமே?

புத்தி இருந்தால், அரசியல் தெளிவு இருந்தால் ஆராய்ந்து பேச வேண்டும். யாரோ ஏமாற்றி எழுதிக் கொடுத்ததை நம்பி இவரும் சட்டசபையில் வந்து பேசியுள்ளார். சினிமாவில் பேசுவது போல, ஸ்க்ரிப்ட்டில் இருப்பதை பேசி, தனது ரசிகர்களை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்." என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+