காக்கா கூட்டம்.. ரஜினி சொன்ன வார்த்தையை கையில் எடுத்த திமுக.. விஜய்யை அட்டாக் செய்த ஆர்எஸ் பாரதி!
சென்னை: திமுகவுக்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம், மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் பரப்புரை பகுதியில் நாங்கள் வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2ஆம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் இருந்து காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் திருச்சி வந்த அவர், நாகைக்கு தனது காரில் பயணித்தார். இதன்பின் பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.

சாலை முழுவதும் பொதுமக்கள் நின்று வரவேற்பு அளிக்க, அவர் புத்தூர் ரவுண்டானா பகுதிக்கு வருவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியது. ஆனால் விஜய்யை காண்பதற்காக அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும் புத்தூர் ரவுண்டானா பகுதியில் குவியத் தொடங்கி இருக்கின்றனர். அதிக கூட்டம் காரணமாக சிலர் மயங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.
இதனிடையே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு திமுக தான் காரணம் என்று சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையின் பெயரில் தான் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனாலும் தவெக தொண்டர்கள் சோசியல் மீடியாவில் திமுகவை சாடி வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடையது கொள்கைக்கான கூட்டம்.. மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் நாங்கள் வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி காக்கா கூட்டம் என்று தவெக தொண்டர்கள் கூட்டத்தை விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை ரஜினிகாந்த் கூறி, விஜய்யை விமர்சித்திருந்தார். இதன்பின் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் சோசியல் மீடியாவில் ஏற்பட்டது.
இதன்பின் ரஜினிகாந்த் அடுத்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், காக்கா என்று யாரையும் சொல்லவில்லை. விஜய்யை அப்படி கூறியதாக ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன என்று விளக்கம் அளித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் பயன்படுத்திய காக்கா வார்த்தையை வைத்தே ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஏற்கனவே தவெகவினரை சீமான் அணில் என்று கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்!












Click it and Unblock the Notifications