அண்ணாமலையை தான் முதலில் கைது செய்யணும்! அவர் பேசுவது வேடிக்கையாக இருக்கு! -ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அண்ணாமலை நாள்தோறும் திட்டமிடுவதாகவும் இதனால் அவரை தான் முதலில் கைது செய்ய வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மக்களை தாம் இழிவுப்படுத்தவில்லை என்றும் நாய்கறி சாப்பிடுவது நாகாலாந்து மக்களின் கலாச்சாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதை மேற்கோள் காட்டித் தான் தாம் பேசினேன் என்றும் மற்றபடி வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

யாருக்காகவும் பயந்து தனது கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன் எனக் கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, தாங்கள் கருணாநிதியிடம் அரசியல் கற்றவர்கள் என்பதால் எதையுமே சரியாகத்தான் செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களை கவனிக்க நேரமில்லாத ஆளுநருக்கு, திமுகவினர் எந்த மேடையில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மட்டும் நேரம் இருக்கிறதா என வினவியுள்ளார்.
நாகா மக்களை புண்படுத்தும் வகையில் தாம் பேசாத போது அதை மிகைப்படுத்தி ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாகா மக்களை நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று கூறியதற்காக தன்னை கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை கூறுவது, வேடிக்கையாக உள்ளது என்றும் குற்றவாளி நிரபராதியை பார்த்து அவரை கைது செய்யுங்கள் எனச் சொல்வது போல் உள்ளது எனவும் கிண்டல் செய்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அண்ணாமலை நாள்தோறும் திட்டமிடுவதாகவும் இதனால் அவரை தான் முதலில் கைது செய்ய வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி இனிமேலாவது தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னல்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications