ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை! "சுழன்ற" ஊழியர்கள்.. "இந்த" 2 நாளைக்கு தமிழக ரேஷன் கடைகளுக்கு லீவு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளையடுத்து, நியாயவிலைக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நியாயவிலைக்கடைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

ஆதார் அடிப்படை: ஆதார் அடிப்படையில் பதிவு நடைபெற்றதால், ரேஷன் கடைகளிலிருந்த விரல்ரேகை பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர, சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நேரத்தில், தமிழக ரேஷன் கடைகளுக்கு, 2023 ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4ம் தேதி விடுமுறை நாட்களாக இருந்தது.
இருந்தாலும், அந்த 2 நாட்களும் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். எனவே, ஜூலை 23ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4ம் தேதி ஆகிய 2 நாட்களும் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளும் இயங்கின.
பதில் விடுமுறை: அப்போதே, இதற்கு பதில் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையரால் தெரிவிக்கப்பட்டிருந்தது... இந்நிலையில், அந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்றும், அடுத்த மாதம், 20ம் தேதியும் விடுமுறை அறிவித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகளிர் உரிமைத்தொகை: "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுமுறை தினங்களான 23.7.2023 மற்றும் 4.8.2023 ஆகிய 2 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் பணிபுரிந்தனர். இந்தநிலையில், அதற்கு ஈடாக அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் 15.6.2024 (இன்று) சனிக்கிழமை மற்றும் 20.7.2024 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்கள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.. இப்போது மாற்று விடுமுறையாக ஜூன் 15 மற்றும் ஜூலை 20ஆம் தேதி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையாக வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரேஷன் கடைகளில் பொருட்களை விற்கும்போது வழங்கப்படும் ரசீதில், ரேஷன் கார்டு எண், நுகர்வோர் பெயர், பொருட்கள் விற்பனை அளவு, அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது, மொத்த தொகையில் கார்டுதாரர் வழங்க வேண்டியது, தமிழக அரசின் மானியம் எவ்வளவு என்ற விபரங்கள் அந்த ரசீதில் இடம் பெற்றிருக்கின்றன.
ரசீதுகள்: சில ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இப்படியொரு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது... இதனை பார்த்து, அரசுக்கு ஏற்படும் செலவை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், ரேஷன் கடைகளில் தவறு நடந்தால், ரசீதில் உள்ள தொலைபேசி எண்களிலும் புகார் தரவும் முடியும்.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications