Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் அக்கவுண்ட்டில் விழலையே.. முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலினிடம், பெண்கள் முறையிட்டிருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன..

rs1000 Kalaignar Magalir Urimai Thogai and What did Chief Minister MK Stalin say about Urimai Thogai 1000 rupees

1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருப்பின், அதற்கான காரணங்களும் பயனாளிகளுக்கு இங்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை, பயனாளிகள் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் அவர்களை இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே, வெப்சைட் (https://kmut.tn.gov.in) ஒன்று தொங்கப்பட்டுள்ளது..

விண்ணப்ப நிலைமை: இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் வரும்.. அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபடியே உள்ளதால், இதற்கும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது..

முகாம்கள்: அதன்படியே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

மேல்முறையீட்டுக்கு வருபவர்கள் ஆதார் அட்டையும், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தையும் எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணம் வராத விண்ணப்பதாரர்கள் இ சேவை மையங்களில் குவிந்து வருகிறார்கள்...

இந்நிலையில், உரிமைத்தொகை வராதவர்கள், முதல்வர் ஸ்டாலினிடமே முறையிட்ட சம்பவம் நடந்துள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் உளுந்தையிலிருந்து, ஸ்ரீபெரும்புதூர் வழியாக, சென்னை நோக்கி முதல்வர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார்.

rs1000 Kalaignar Magalir Urimai Thogai and What did Chief Minister MK Stalin say about Urimai Thogai 1000 rupees

பெண்கள் முறையீடு: அப்போது, கிளாய் பகுதியை ஸ்டாலின் கடந்தபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த மக்களிடம், காரில் அமர்ந்தபடி நலம் விசாரித்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள் முதல்வரிடம், "பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தும், எங்களுக்கு 1,000 ரூபாய் கிடைக்கவில்லை" என்றனர்..

இதையடுத்து முதல்வர், கட்சி நிர்வாகி ஒருவரை அழைத்து, அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.. அப்போதுதான் அந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாமல், சாலைகளில் இருள் நிறைந்து காணப்பட்டதை பார்த்தார் முதல்வர்.. பிறகு, அந்த பகுதி முழுவதும் போதிய மின்விளக்குகளை அமைக்கும்படியும் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+