ரூ.1000 வருமா? மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வட்டமிடும் அந்த "கண்கள்".. அதிரடி அறிவிப்பு வரப்போகிறதா
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவரும் நிலையில், இன்றைய தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

அப்பீல்: மகளிர் உரிமைத்தொகை: இதனிடையே, இந்த விவகாரத்தில், அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கடந்த வாரம், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்திருந்தார். விண்ணப்பிக்கும், ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதால், யாருடைய பெயரும் விடுபடாது என்று உறுதி தந்துள்ளார்.
ஆவேசம்: எனினும், ஆனால், பொதுமக்களிலேயே ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. மேல்முறையீடு செய்தும்கூட, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்களாம். இதனால், உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. .
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. அந்தவகையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசப்படும் என்று தெரிகிறது.. முக்கியமாக, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக இந்த திட்டத்தில் இறங்கியிருப்பதால், பெண்களுக்கு அதிருப்தி ஏற்படாதவகையில், அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்படுமாறு அறிவுறுத்தலாம் என்கிறார்கள். மேலும், அதிகாரிகள் யாராவது அலட்சியமாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஸ்பெஷல் செய்தி: அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு நாம், ஒரு ஸ்பெஷல் செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, இந்த உரிமைத்தொகை திட்டம் குறித்து, ரகசியமாக ஒரு சர்வே எடுக்கும்படி, தன்னுடைய சம்பந்தி குடும்பத்தினர் தரப்பினரிடம் பொறுப்பை தந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
இந்த திட்டம், பெண்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது ? அதிருப்தி இருக்கிறதா? என்பது குறித்து சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம்.
மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறாராம் எடப்பாடி. அந்த பட்டியலை வைத்து, பயன்பெற்றவர்கள் யார் யார் அறிய விரும்புகிறாராம்.
எதிர்க்கட்சிகள்: இதற்கிடையே, அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி, பாஜகவும் இந்த விஷயத்தை கையிலெடுத்து உள்ளது.
எனவே, உரிமைத்தொகை திட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் எந்தவிதமான அரசியலும் செய்துவிடக்கூடாது என்பதிலும், கூடுதல் கவனத்தை முதல்வர் இனி செலுத்த போவதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமாகவும், இன்றைய தினம் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள். அந்தவகையில், இன்று நடக்கபோகும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, இந்த உரிமைத்தொகை திட்டத்தினால், மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், மாற்றங்கள், இந்த திட்டத்தினால் பலன்பெற்றவர்கள், என அனைத்தையும் அறியவும் திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் இதை வைத்தே அரசியல் செய்ய காத்திருப்பதால், இந்த திட்டத்தை வைத்தே, ஸ்கோர் செய்யவும் திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால், மகளிர் உரிமை தொகை திட்டம், இன்னும் வேகமெடுக்கும் என்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications