Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூல்ஸ் மாறல.. ரூ.1000 வாங்கிட்டீங்களா? அதைவிடுங்க.. இன்றே பூத் சிலிப் வழங்கப்படும்: சத்யபிரதா சாகு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்றைக்குள் நிறைவுபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் வழங்கப்படுவது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருந்ததுடன், இதுகுறித்து செய்தியாளர்களிடமும் விவரித்திருந்தார்.

rs1000 Magalir Urimai thogai Scheme and Today is the last day for distribution of Booth Slips in Tamil Nadu Says Satyapratha Sahu

புகார்கள்: அவர் பேசியபோது, "தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். சி-விஜில் செயலி வாயிலாக அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம்.

பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும்" என்றார்.

பூத் சிலிப்: இதையடுத்து, ஏப்ரல் 13 ம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கும் பணி முடிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் உறுதி தந்திருந்தனர். அதுவும் இல்லாமல், இந்த முறை பூத் சிலிப் வழங்கும் பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.. காரணம், இதில், குளறுபடிகள்இருப்பதால், அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கக்கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முறை தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்கியது.. வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.. பூத் சிலிப் ஏப்ரல் 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் பணிகள் நிறைவுபெறுகின்றன.

நம்பிக்கை: நேற்றைய தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்றுமுன்தினம் வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (இன்றைக்குள்) வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சி.விஜில் செயலி மூலம் இதுவரை 3605 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 74.52 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய்: மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் அளிக்க எந்தவிதமான தடையும் இல்லை. தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெற தேவையில்லை" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்... பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஊா்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பாதுகாப்பு பணிகள்: இதைத்தவிர, வாக்குப்பதிவு தினத்தன்று கூடுதலாக காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10,000 போலீஸாா் ஏப்ரல் 16-ம் தேதி தமிழகம் வர உள்ளனா். இவா்கள் அனைவரும் 17-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறாா்கள்.

தமிழக காவல் துறை, துணை ராணுவத்தினா், பிற மாநில காவல் துறை, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள், ஊா்காவல் படையினா் உள்பட மொத்தம் 1.90 லட்சம் போ் ஈடுபட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+