குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.8000 பரிசா? நிலுவை சேர்த்து மக்களுக்கு வேண்டும்: அரசுக்கு பாஜக கோரிக்கை
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதன் காரணமாக தற்போது ரூ.3 ஆயிரம் தமிழக அரசு அறிவித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து வருகிறார்.. இந்நிலையில், தமிழக பாஜகவும் மிக முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளது.. இது மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த தொகையானது இதுவரை அறிவிக்கப்பட்ட பொங்கல் ரொக்கப் பரிசுகளில் அதிகமான தொகையாகும். அதாவது கடந்த முறை எடப்பாடி பழனிசாமி அறிவித்த தொகையைவிட அதிகமாகும்.
5 ஆயிரம் பொங்கல் பரிசு
எனினும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பினால் திருப்தியடையவில்லை.. இந்த முறை மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.. இது தொடர்பாக போஸ்டர்களையும் அடித்து ஒட்டி வருகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில் தமிழக பாஜக, திமுக அரசுக்கு மற்றொரு கோரிக்கையை வைத்துள்ளது.. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்..
பரிசுடன் ரூ.8000
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல் திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல் பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 2021ல் பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2022, 2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2024ல் பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது.
நிலுவை தொகை, பரிசுத் தொகை 8 ஆயிரம் ரூபாய்
தமிழகத்தின் அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது வருந்தத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் நான்காண்டுகளாக நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொள்கிறது" என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகையை தரமானதாகவும், ஊழலின்றியும் வழங்க வேண்டும் என்று நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி தர வேண்டும் என்று மீண்டும் பாஜக விடுத்துள்ள இந்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications