ஆர்எஸ்எஸ் மதசார்பு நாடாக அறிவிக்க சொன்னது.. இந்திய அரசமைப்பையே ஏற்கவில்லை - ஜவாஹிருல்லாவின் ரீவைண்ட்
சென்னை: அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம் என குடியரசு தின வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முகக் கலாச்சாரமும் இந்தியத் தேசத்தின் இரு கண்களாக இருக்கின்றன. அவற்றைப் பேணிப் பாதுகாப்பதே நமது தலையாயக் கடமையாகும். அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கி உள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்.

விடுதலை பெற்ற இந்தியாவிற்கான ஓர் அரசு உருவாக்கப்பட்ட வேளையில், நமது விடுதலைப் போராட்ட வீரர்களால் நிரம்பி இருந்த அரசமைப்பு சபை நமது அரசு நிர்வாகத்தின் அடித்தளமாக மதச்சார்பின்மை அமையும் என நிர்ணயித்தனர். அனைத்துப் பெண்களுக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சம வாக்குரிமை வழங்குவதை அங்கீகரிக்காமல் மதச்சார்புள்ள நாடாக இந்தியா உருவாக வேண்டுமென்று அப்போது ஆர்.எஸ்.எஸ் எழுப்பிய குரல் நிராகரிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற, தாராளமயமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற வகையில் நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வெளிப்படையாகவே எதிர்த்து அதன் வார இதழில் தலையங்கமே எழுதியது. 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவின் எதிர்காலத்தைச் சிறப்பானதாகக் கட்டமைக்க முடியும். ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளும் முழுமையாக மதிக்கப்படுகிற போது தான் குடியரசு அதன் உண்மையான அர்த்தத்தைப் பூர்த்தி செய்யும்.
இந்திய அரசியலமைப்பு உருவாகுவதற்கு உன்னதப் பங்களிப்புகளை வழங்கிய மேதைகள் அனைவரையும் இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து அவர்களின் நோக்கத்தை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம். விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் உண்மையான வளர்ச்சி பெறவும் சாதி மத மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இந்தியாவோடு கரம் கோப்போம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications