"பன்றி".. காரணமே பாஜகதான்.. ஸ்டாலினை பற்றி கேட்டதுமே.. திருமாவளவனுக்கு வந்த ஆவேசம்.. ஸ்பெஷல் தோழமை
பாஜக அரசியல் மீது சரமாரி விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளார் திருமாவளவன்
சென்னை: பாஜகவுக்கு திமுக ஒருபோதும் பணிந்து போனதில்லை.. இனியும் போகாது.. அதற்கான அவசியமும் இல்லை.. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முக்கிய காரணமே இந்த பாஜகதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் போட்டு தாக்கி உள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

சரவெடி திருமா
அப்போது அவரிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம்.. திமுக கூட்டணி கட்சிகளுக்கு, திமுகவை நேரடியாக விமர்சிப்பதில் ஒரு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே.. தமிழகத்தில் குண்டுவெடிப்பு, 6 பேர் கைது போன்றதொரு சம்பவங்கள் கடந்த கால ஆட்சியில் நடந்திருந்தால், திருமாவளவனோ, பாலகிருஷ்ணனோ அதை எதிர்கொண்டிருக்க கூடிய முறையே வேறு.. எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட நிறைய விமர்சனம் செய்து கொண்டிருந்த நீங்கள், ஆளும் கட்சியான பிறகு எதிர்க்க தயங்குவதாக கூறப்படுகிறதே? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எப்படி உள்ளது என்பன போன்ற கேள்விகளை நாம் முன்வைத்தோம்.. அதற்கு திருமாவளவன் தந்த பதில்தான் இது:

திருமாவளவன்
"நாங்கள் கூட்டணி கட்சியாக இருக்கிறோம், தோழமை கட்சியாக இருக்கிறோம்.. அப்படி இருக்கும்போது, ஏன் நாங்கள் நெகட்டிவ்வாக திமுக அரசை அணுக வேண்டும்? தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்ட நாங்கள் தயங்கியது கிடையாது.. அதேமாதிரி நெகட்டிவ்வாகவே பேச வேண்டும் என்ற அவசியமும் இல்லையே.. ஒரு காரியத்தை 2 விஷயமாக அணுகலாம்.. ஒன்று, அச்சுறுத்தி, பணிய வைப்பது.. இன்னொன்று, நட்பாக, அன்பாக, தோழமையுடன் சாதிக்க வைப்பது.. எந்த இடத்தில் நமக்கு தோழமை இல்லையோ, அந்த இடத்தில் எதிர்ப்பை காட்ட வேண்டியதுதான்.. இது ஒன்றும் திருமாவளவனின் இயல்பு மட்டும் இல்லை.. இது தான் ஒட்டுமொத்த மனித இயல்பும்..

தில் + துணிச்சல்
ஆட்சியின் தவறுகளை, நாங்கள் நட்பாக எடுத்து சொல்லக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது.. உடனுக்குடன் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கிறது.. சுட்டிக்காட்டுவதற்கான துணிச்சலும் இருக்கிறது.. 10 ஆயிரம் பேரை திரட்டி, ஸ்ரீமதி விஷயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோதேம, இந்த திமுக ஆட்சியில் தானே? கிருஷ்ணகிரியில் தலித்கள் கொல்லப்படுகிறார்கள், காவல்துறையினர் ஒருசார்பாக செயல்படுகிறார்கள் என்ற புகார் வந்ததே அங்கும்தானே 10 ஆயிரம் பேருக்கு மேல் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தோமே.. திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கும்போதுதானே?

பாலகிருஷ்ணன்
திமுக கூட்டணியில் இருக்கும்போதுதான், எந்த தவறு நடந்தாலும், அறிக்கைகளை வெளியிட்டு சுட்டிக்காட்டி உள்ளோம்? அதுக்காக பகையின் அடிப்படையில்தான் ஒன்றை எடுத்து சொல்ல வேண்டும் என்றில்லை.. சண்டை போட்டுதான் சொல்ல வேண்டும் என்றில்லை.. ஆளும்கட்சி அணியிலேயே நாங்கள் உள்ளதால் எளிதில் அவர்களை சந்தித்து பிரச்சனையை பேச முடிகிறது.. மனுவாக தருகிறோம்.. தோழமையுடன் பேசுகிறோம்.. அவையில் சுட்டிக்காட்டுகிறோம்.. அறிக்கைகளை வெளியிடுகிறோம்.. மின்கட்டண உயர்வுக்குகூட பாலகிருஷ்ணன் திரும்ப பெற வேண்டும் என்றார்.. விசிகவும்தான் அதை சொன்னோம்..

பக்கத்து வீட்டுக்காரர்
ஆளும்கட்சியாக அதிமுக இருந்தபோதும், இப்படித்தான் தோழமையுடன் சுட்டிக்காட்டினோம்.. திமுக கூட்டணிக்குள் அதாவது ஒரே குடும்பத்தில் இருக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒரு பிரச்சனையை சொல்வதற்கும், குடும்பத்துக்குள்ளேயே அந்த பிரச்சனையை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவுக்கு இல்லை.. ஆனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்றுதான் பாஜக இங்கு செயல்பட்டு வருகிறது.. வன்முறைகளை தூண்டி, திமுகவை சீண்டி, திமுகமீது ஏதாவது குறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள்..

நெருடல்
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.. போலீசுக்கு பாஜகவில் உள்ளவர்களே சவால் விடுகிறார்கள்.. எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜக தொண்டர்கள்கூட, "எங்களுக்கும் திமுகவுக்கும்தான் சண்டை, நீ ஒதுங்கிடு" என்று போலீசுக்கு சவால் விடுகிறார்கள்.. இதை அண்ணாமலையும் செய்கிறார், சாதாரண பாஜக தொண்டர்களும் செய்கிறார்கள்.. வெளியில் காலை நீட்டி வம்புக்கு இழுக்கும் போக்கு இது என்பார்கள்.. அதனால் சட்டம் ஒழுங்கில் திமுக மீது பெரிய நெருடல் இல்லை.

"பன்றி "
இப்படி பாஜக வம்புக்கு இழுப்பதை, ஆளும் கட்சியான திமுக கண்டுகொள்வதில்லை.. எதிர்வினையாற்றக்கூடிய அளவுக்கு பாஜகவுக்கு திமுக முக்கியத்துவம் தருவதில்லை.. "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடம்கொடுக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம், பேச வேண்டாம்" என்று முதல்வரே அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளர்.. "சாக்கடை அல்லது சேற்றில் புரண்டு எழுந்து வருகிற ஒன்று" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் "பன்றி " என்று எழுதவில்லை..

சாக்கடை
"சாக்கடை அல்லது சேற்றில் புரண்டு எழுந்து வருகிற ஒன்று நம்மை பார்த்ததும் சிலிர்த்து காட்டுகிறது என்றால், நாமும் அதற்கு முன்னால் சிலிர்த்து காட்டக்கூடாது, ஒதுங்கிதான் போக வேண்டும், நம் மீது சேறு படக்கூடாது.. மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் முதல்வர் அந்த அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.. இதை எப்படி பார்ப்பது? பாஜகவுக்கு திமுக பணிந்து போகிறதா? ஒதுங்கி போகிறதா? இதை புரிந்து கொள்பவர் பார்வையை பொறுத்தது" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications