ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நெருக்கமானவர்.. முரசொலிக்கு பதில்
சென்னை: மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆடல் அரசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வாட்ஸ் அப்பில் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது. அதில், நம் உயிர் உள்ளவரை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நுழையக் கூடாது- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என தகவல் இடம் பெற்றது.

நெருக்கமான தொடர்பு
இதனை மறுத்து தமிழக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் ஆடல் அரசன் வெளியிட்ட அறிக்கை: முரசொலியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்- ஆர்.எஸ்.எஸ். குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அது பொய்யான தகவல் மட்டும் இல்லாமல், முத்துராமலிங்க தேவர் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

முத்துராமலிங்கம் சொன்னது
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2-வது தலைவர் கோல்வால்கர் 51-வது பிறந்த நாள் விழா 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெற்ற கோல்வாகர் பிறந்த நாள் விழாவுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை வகித்தார். இந்த விழாவில் பேசிய முத்துராமலிங்க தேவர், தம் கருத்துகள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் இணைந்தே இருக்கின்றன என்றார்.

வெட்கக் கேடானது
உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்கள் மற்றும் தெய்வ பக்தர்களால் மதிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தார் என்பது பொய்யானது. ஆர்.எஸ்.எஸ். குறித்து தவறான எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த திமுக, அதன் முரசொலி நாளேடு முயற்சிப்பது வெட்கக் கேடானது.

கண்டிக்கத்தக்கது
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியானது, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஆடல் அரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடி வருகை தரக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதனையொட்டி பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனை முன்வைத்து முரசொலி இந்த தகவலை வெளியிட்டிருந்தது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications