உங்கள் குழந்தையின் எதிர்காலம் ஆரம்பம்..தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை! ரெடி ஆகுங்க பெற்றோர்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அடிப்படையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் மாணவர்கள் இலவசமாக சேர்க்கை பெற வாய்ப்பு பெறுகின்றனர். இத்திட்டத்தின் முக்கியத்துவம் என்னவெனில், மாணவர்கள் எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேர்ந்து, 8ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் கல்வி பயில முடியும் என்பது தான்.

இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் பள்ளிகளும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ போன்றவை தங்கள் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆளவுக்கு மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும்.

RTE School edcucation

அதற்கான விண்ணப்பதாரர்களாக பொருளாதாரத்தில் நலிந்தோர் மற்றும் சமூக ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டோர், ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை தேவையான ஆவணங்களாக இருக்கின்றன. எனவே, பெற்றோர்கள் இந்த ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒருவர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளை தேர்வு செய்யலாம். ஒரு பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை பெற விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், விண்ணப்ப பதிவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் நேர்மையான முறையில் தேர்வாகி, கல்வியில் முன்னேறுவதற்கான படியாக இந்த RTE திட்டம் அமைந்திருக்கும் நிலையில், பெற்றோர்கள் தற்போது அதற்கு விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிஇ என்றால் என்ன?:

ஆர்டிஇ எனப்படும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகள் தனியார் பள்ளிகளில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சிறுபான்மை ஏற்ற தனியார் பள்ளிகள் சுயநிதி பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகள் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் இணையதளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் மூலம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தை பொருத்தவரை rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை பதிவிட்டு மாணவரின் புகைப்படம், மாணவரின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர்களின் அடையாளச் சான்றிதழ், முகவரி சான்று, வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு கவனமாக நிரப்ப வேண்டும்.

தனிப்பட்ட தகவல்களை கொடுத்த பின்பு தனியாக பாஸ்வோர்ட் வழங்கப்படும். அதற்குப் பிறகு லாகின் செய்து உங்களது பாஸ்வேர்டை கொடுத்தால் புதிய டேஷ் போர்டில் ஒவ்வொரு விவரங்களையும் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். பின்பு உங்கள் முகவரியின் அடிப்படையில் அருகில் இருக்கும் பள்ளிகள் பெயர்கள் கொடுக்கப்படும். அவற்றில் விருப்பமான பள்ளியை தேர்ந்தெடுக்கலாம். இறுதியில் அப்ளிகேஷனை சப்மிட் செய்து விட்டால் உங்கள் அப்ளிகேஷனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ கொடுத்து விட்டு வர வேண்டும். அதிகபட்சம் ஐந்து பள்ளிகள் வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒரே பள்ளியில் அதிக பேர் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+