சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு செலவானது.. பரபர ஆர்டிஐ பதில்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு இருந்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டும் வந்தது. தொடர் சிகிச்சையை அடுத்து அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் முக்கிய நபர்கள் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உண்மை

உண்மை

தற்போது மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் இந்த மரணம் தொடர்பான பல முக்கிய ஆதரங்களை வெளியே கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சில முக்கிய ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளார்.

கேள்வி கேட்டார்

கேள்வி கேட்டார்

இதில் ஜெயலலிதா மரணம் அடைந்த தேதி, மரணம் அடைந்த நேரம், அறிவிக்கப்பட்ட நாள், செலவு எவ்வளவு ஆனது என்று பல கேள்விகளை கேட்டார். இதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அரசு சார்பில் இதற்காக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த தேதி

எந்த தேதி

அதன்படி ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அதே நாளில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவரது மருத்துவ செலவிற்காக அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை.

எவ்வளவு ரூபாய்

எவ்வளவு ரூபாய்

ஆனால் இவரது இறுதிச்சடங்கிற்கு மொத்தம் 99 லட்சத்து 83 ஆயிரத்து 586 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது அரசு சார்பாக செய்யப்பட்ட செலவு ஆகும். முதல்வர் என்ற முறையில் இந்த செலவு அரசு சார்பாக செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஓய்வூதியம் யாருக்கு

ஓய்வூதியம் யாருக்கு

மேலும் ஜெயலலிதா மறைந்த போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதனால் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அந்த பணம் யாருக்கு வழங்கப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு அந்த விவரங்கள் தலைமை செயலகத்திடம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

English summary
RTI reveals the expense cost for Jayalalitha Funeral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X