மீனம்பாக்கம் பாலத்தில் ஓடும் போதே திடீரென்று பற்றி எரிந்த கார்.. பெரும் பரபரப்பு.. என்ன நடந்தது?
சென்னையில் மீனம்பாக்கம் பாலத்தில் ஓடும் போதே கார் ஒன்று பற்றி எரிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் மீனம்பாக்கம் பாலத்தில் ஓடும் போதே கார் ஒன்று பற்றி எரிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள பாலத்தில் கார் ஒன்று செல்லும் போது திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.
அருகில் மற்ற கார்கள் நிறைய சென்று கொண்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து இந்த செடன் வகை கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் கார்
சேலத்தை சேர்ந்த கமலேஷ், தமது தாய் மற்றும் சகோதரருடன் சென்னைக்கு குடும்ப விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போதுதான் கார் தீ பிடித்து எரிந்து இருக்கிறது. முதலில் காரின் முன்பக்கத்தில் பிடித்த தீ பின் வாகனம் முழுக்க பரவியது.

மின்கசிவு
இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக காரில் தீ பிடித்து இருக்கலாம். ஏசியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தீ பிடித்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

காயம்
இதில் காரில் பயணித்த யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் நேரவில்லை. கார் ஓட்டுநர் கமலேஷ் மட்டும் சிறிய தீ காயங்களால் பாதிக்கப்பட்டார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்குவரத்து பாதிப்பு
அங்கு கார் தீ பிடித்த காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி முதல் விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தார்கள்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications