நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ.87 கோடி இடிக்குதே! 100 நாள் வேலைக்கு போகாவிட்டாலும் சம்பளம்? இது எப்போ
சென்னை: கோடிக்கணக்கானோருக்கு பெரும் பலனை தந்து கொண்டிருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.. அதிலும், இந்தியா முழுவதிலும் 100 நாள் வேலை திட்டத்தில், 110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக, சமூக தணிக்கையில் தகவல் வெளியாகியிருப்பது, ஒட்டுமொத்த பேருக்கும் கவலையையும், அதிருப்தியையும் உண்டுபண்ணி வருகிறது. என்ன நடந்தது 100 நாள் வேலை திட்டத்தில்?
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை உறுதி செய்வதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.. அப்போது முதலே பொதுமக்களின் ஆதரவையும், வரவேற்பையும் இந்த திட்டம் பெற்று வருகிறது. இதனை சுருக்கமாக, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று நாட்டு மக்கள் அழைத்து வருகிறார்கள்..
100 நாள் வேலைத்திட்டம்
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன.. இதன் மூலம் கிராமப்புறத்து மக்களுக்கு வருடத்துக்கு 100 நாட்கள் வேலை உறுதிசெய்யப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்தில் வேலை செய்யாமலேயே சம்பளம் கொடுக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதையடுத்து, சமூக தணிக்கையும் செய்யப்பட்டு வருகிறது.
நூறு நாள் வேலை - ரூ.110 கோடி முறைகேடு
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சமூக தணிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. குறிப்பாக, "100 நாள் வேலை திட்டத்தில், இந்தியா முழுதும் நடப்பாண்டில் மட்டும், ரூ.110 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பது, சமூக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் நடப்பாண்டில் 6470 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட சமூக தணிக்கையில், ரூ.26.57 கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டிலிருந்து இபபோதுவரை இந்தியா முழுவதும் 1000 கோடி ரூபாய் அளவுக்கும், தமிழகத்தில் 87 கோடி ரூபாய் அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளன.
வேலை இல்லாமல் சம்பளம்
இதில், தமிழகத்தில் நடப்பாண்டில், 1.39 கோடி முறைகேட்டு பணமும், கடந்த 6 வருடங்களில் 38 கோடி முறைகேட்டு பணமும் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல வேலைக்கு வராத லட்சக்கணக்கானோருக்கு சம்பளம் தரப்பட்டிருக்கிறது.. இவர்கள் எல்லாம் பணியில் இருப்பதாக கூறி, அவர்களது வேலை நாட்களையும் அதிகரித்து சம்பளம் தரப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி காட்டம்
இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை ஹைகோர்ட்டின் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அன்புமணி வெளியிட்டிருக்கிறார்.. அதில், "ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசு, தவறுகள் கண்டறியப்பட்ட பிறகு முறைகேடு செய்யப்பட்ட நிதியை மீட்டெடுப்பதிலும் அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது ஊழலுக்கு துணை போகும் செயலாகும்.
ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். லட்சக் கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப்பட்டிருக்கிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் குறித்த அனைத்து விவரங்களும் தமிழக அரசிடம் உள்ளன.
திமுக அரசே காரணம்
ஊரக வேலை திட்டம் முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகத் தான் சமூகத் தணிக்கை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அதில் தெரியவரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயல்கிறது என்பது ஐயமின்றி உறுதியாகி யுள்ளது.
ஊழலில் ஈடுபட்டவர்களை திமுக அரசு காப்பாற்றத் துடிப்பதால் தான், திமுக ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது.
உயர்நிலை விசாரணை தேவை
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஏழை மக்களுக்கு வேலை வழங்கப்படும் நாள்களை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இந்தத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்களைத் தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
ஊழலால் இந்த திட்டம் முடங்கி விடக்கூடாது. எனவே, இந்த ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications